இறைவனின் திருப்பள்ளியெழுச்சி -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-22



பாடல்

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் 
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் 
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் 
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் 
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

பொருள்

இந்திரனுக்கு உரிய திசையான கிழக்கில் சூரியன் உதித்து இருள் நீங்கி விட்டது. திருபெருந்துறை சிவபெருமானே! உனது மலர் போன்ற முகத்தில் தோன்றும் அருளை போல சூரினும் மெள்ள மெள்ள எழுகிறான். உனது கண்களை போன்ற பூக்கள் இதழ்களை விரித்து மலர்கின்றன. அந்த மலர்களில் உள்ள தேனை குடிக்க ஆறு கால் உள்ள வண்டுகள் சத்தம் போடுகின்றன. திருபெருந்துறையில் வாழ்பவனே! அருளாகிய செல்வத்தை எங்களுக்கு தர வரும் ஆனந்த வடிவமான மலையே! அலைப் பொங்கும் கடல் போன்றவனே! திருப்பள்ளியிலிருந்து எழுவாயாக.

Published by
Staff

Recent Posts