சுந்தர்.சி படத்தில் நடிக்க பயமா இருக்கும்… அரண்மனை பட விழாவில் கோவை சரளா பேச்சு…

1962இல் பிறந்த நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் துணை நடிகை மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகையும் ஆவார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து கொண்டிருக்கும் கோவை சரளா 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மூன்று முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு முறை சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது ஆகியவற்றை வென்றுள்ளார். பிரம்மானந்தம், கவுண்டமணி, செந்தில், விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு- கோவை சரளா இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மிக பிரபலமானவை.

கோவை சரளா வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’, ஜீ தமிழின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, சன் டிவியின் ‘செல்லமே செல்லம்’ போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் கோவை சரளா, இறுதியாக அவர் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே நடிகை கோவை சரளா ‘அரண்மனை 2’ இல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ‘அரண்மனை 4’ படத்தின் விழாவில் கலந்து கொண்ட கோவை சரளா அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். அதில் இயக்குனர் சுந்தர். சி அவர்களைப் பற்றியும் பேசியுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், இந்த படத்தில் நிறைய ஆர்டிஸ்ட்ஸ் வேலை செஞ்சோம். ஆனால் டைரக்டர் ஒருவர் சுந்தர். சி தனி மனிதன் எங்க எல்லாரையும் பாக்கணும். அவர் சும்மா இருக்கார்னு நெனச்சிட்டு இருப்போம். ஆனா திடிர்னு எந்திச்சு வந்து நீங்க இதுல தப்பு பண்ணிடீங்க அவர் அதுல லைட் ஆஹ் மிஸ் ஆகிருச்சுனு டக்கு டக்குனு சொல்லுவார்.

நாம இல்லன்னு சொன்னா ஸ்கிரீன்ல உடனே போட்டு காமிச்சிடுவார். அந்த அளவுக்கு ஷார்ப்பான மனிதர். இந்த காலகட்டத்திலே டைமிங் பாக்குறது, ஷாட்ஸ் பிரிகிறதுல, வேலை வாங்குறது அப்படிங்கிற வகையில இருக்கிற இயக்குனர்கள் கம்மி. அந்த வகையில முதல் இடத்தில இருக்கிறது சுந்தர். சி அவர்கள் தான். அவர் படத்தில நடிக்கும் போது எனக்கே கொஞ்சம் பயமா இருக்கும் ஏன்னா திடிர்னு திட்டிவிடுவார். அவர் எதிர்பாக்குறது வரலனா கண்டிப்பா எல்லாருக்கும் திட்டு விழும். ஆனாலும் இந்த யூனிட் கூட நடிச்சது ரொம்ப சந்தோசம். அரணமனை படங்களில் முன்னதாக வந்த 3 பாகங்களை விட இந்த 4 ஆம் பாகம் கண்டிப்பாக அனைவரும் பேசப்படும் வகையில் இருக்கும். இது பான் இந்தியா திரைப்படமாக வெற்றி பெறும் என்று நடிகை கோவை சரளா ‘அரண்மனை 4’ பட விழாவில் பேசியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews