நாடெங்கும் தீபாவளியை பட்டாசு வெடித்து தீபங்கள் ஏற்றி ஒளிமயமாகக் கொண்டாடுவதன் காரணம் என்னன்னு தெரியுமா?

இந்தியக் கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்தது. தீபாவளியை தீ ஒழி என்பர். அதாவது தீமையிலிருந்து விடுதலை கிடைத்து ஒளி பிறப்பது தான் தீபாவளி. தீமை செய்யும் அசுரர்களை கடவுள் அழித்தது தான் தீபாவளி.

நரகாசுரனின் உண்மை பெயர் கௌகன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது அவரின் பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன்.

மகாவிஷ்ணுவின் அசுர வதத்தில் பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகசுரன் எனப்பட்டான். பின்னாளில் அவனே நரகாசூரன் ஆனான். . இவனது அட்டூழியம் அதிகரித்தது.

Narakasuran
Narakasuran

இவன் தேவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல துன்பங்களைக் கொடுத்த வண்ணம் இருந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனைக் கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமாதேவிக்குப் பிறந்தவன். தன் தாயைத் தவிர வேறு எவராலும் கொல்ல முடியாத வரம் பெற்றன்.

இதனால் மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தான். நரகாசுரன் எய்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவதைப் போல் கீழே விழுந்தார். இதைப்பார்த்த சத்யபாமா கோபமடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தாள்.

deepavali2
deepavali2

சத்யபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போது தான் சத்யபாமா தனக்கு தாய் என்று அவனுக்குத் தெரிந்தது.

அவரிடம் அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும், மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் அதிகாலையில் நீராடி மகாலெட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவரக் கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews