சோம்பேறித்தனமாய் இருப்பதாய் நினைக்கிறீங்களா? இதோ உங்க சோம்பேறித்தனத்தை விரட்டி அடிக்க அருமையான டிப்ஸ்!

சோம்பேறித்தனம் என்றால் என்ன?

சோம்பேறித்தனம் உடையவர்கள் தனக்கான வேலைகளை அதை செய்து முடித்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் வரை அதை செய்ய மாட்டார்கள். அந்த வேலையை செய்வதற்கு அவர்களிடம் நிறைய நேரம் இருந்தாலும் அந்த வேலையை திறம்பட செய்வதற்கான தகுதிகள் இருந்தாலும் இறுதி வாய்ப்பு வந்த பின்னரே செய்து முடிப்பார்கள்.

lazy

பெரும்பாலும் பகல் கனவு காண்பவர்களாக இருப்பர். தன்னுடைய வேலையில் சாதிப்பது போல கனவு கண்டு கொண்டே தன் வேலையில் கோட்டை விட்டுவிடுவர்.

தம்முடைய வேலைகளையும் பிறரை செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெரும்பாலான வேலைகளில் அடுத்தவரை சார்ந்து இருப்பர்.

யாரும் எழுப்பும் வரையிலோ அல்லது அவருடைய வேலையை செய் என்று சொல்லும் வரையிலோ இடத்தை விட்டு நகரவே மாட்டர்.

சொகுசான வாழ்க்கையை வாழவே விரும்புவர். கஷ்டப்பட்டு எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதே இவர்களுக்கு கஷ்டமாக இருக்கும்.

lazy girl

சோம்பேறித்தனத்தை விரட்டி அடிக்க என்ன செய்ய வேண்டும்? 

இலக்குகளை நிர்ணயித்து செயலாற்றுங்கள். குறைந்த கால இலக்கு நீண்ட கால இலக்கு என்று இலக்குகளை நிர்ணயித்து அந்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் நிர்ணயத்தை இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயலாற்றுங்கள்.

ஒவ்வொரு நாளும் இன்றைய வேலை என்ன என்பதை திட்டமிட்டு அதற்கு தகுந்தார் போல் செயலாற்ற வேண்டும்.

நமக்காக பிறர் செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தை விரட்டி நம் வேலையை நாமே செய்ய வேண்டும் என்று நினையுங்கள் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

எல்லா வேலைகளையும் சேர்த்து ஒரே அடியாய் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பே அவர்களை வேலையை ஒத்தி போடச் செய்யும். எனவே வேலைகளை அவ்வப்போதே செய்து‌ முடிக்கவோ அல்லது சிறிது சிறிதாக பிரித்து செய்யதிடவோ திட்டமிடுங்கள். நாளை செய்யலாம் என்று நினைத்தால் அந்த நாள் இல்லாமலே போய்விடும்.

laziness

நம்முடைய வெற்றிக்கு எப்படி நாம் தான் காரணமோ அது போல் நாம் செய்யும் தவறுகளுக்கும் நாம் தான் பொறுப்பு என்ற உண்மையை ஆழ் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உற்சாகம் குறைவாக இருப்பதாக தோன்றினால். உற்சாகப்படுத்தவும் உங்களுடைய வேலைகளை பகிர்ந்து அவ்வபோது எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளவும் ஒரு நண்பரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews