ஆன்மீகம்

வீட்டுக்கு வீடு வாசப்படி தான்…. ஆனாலும் குடும்பத்தலைவனுக்கு உரிய பெரிய கடமை இதுதான்…!!!

குடும்பத்தலைவன் என்பவன் நடுக்கடலில் கப்பல் ஓட்டுகிற மாலுமி மாதிரி. இவனை நம்பித் தான் குடும்பமே போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் அவனின் தலையாய பொறுப்பு குடும்பத்தை அமைதி வழியில் கொண்டு செல்வது தான்.

நிறைய குடும்பத்தில் அமைதி இல்லாமல் ஒரே சண்டை சச்சரவு ஆகத்தான் இருக்கிறது. கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், அண்ணன் – தம்பி, அப்பா -பிள்ளை என பலவிதங்களில் சண்டைகள் வருகின்றன. இதற்கு என்ன தீர்வு என்பதை இப்போது பார்ப்போம்.

இதற்கு ஒரு சிறு கதையை நாம் சொல்லலாம். மயில்வாகனன் என்று ஒரு அரசன் இருந்தான். சிறப்பாக ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் நாடும், வீடும் செழிப்பாக இருந்தது. அவன் தன்னை நாடி வருவோர்க்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாரி வாரி வழங்கி வந்தான். இதனால் அவனது புகழ் அகிலமெங்கும் பரவியது. இதைக் கண்ட அவனது விரோதிகளுக்கு இது எரிச்சலை உண்டாக்கியது.

Bairava

உடனே அவன் மீது தீய சக்திகளை ஏவினர். அதனால் சில காலமாக அரசன் மயில்வாகனன் மனநிலை சரியில்லாமல் ஒரே குழப்ப நிலையில் இருந்தான். அவனால் முன்பு போல திறம்பட ஆட்சி செய்ய முடியவில்லை. அடிக்கடி மன உளைச்சலுக்குள் ஆளானான். உடனே இதுகுறித்து ராஜகுருவிடம் ஐடியா கேட்டான். அவரோ மன்னா உங்கள் மீது தீய சக்தி ஏவப்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஒரே வழி தான் உள்ளது. நீங்கள் ஒரு மண்டலத்துக்கு அதாவது 48 நாள்களுக்கு வெண்கடுகு கொண்டு தூப பூஜை செய்ய வேண்டும் என்றான். பைரவருக்கு எலாமிச்சம் வேர், சந்தனம், அருகு, வெண்கடுகு கொண்டு பாத பூஜை செய்து சாம்பிராணி கொண்டு தூபம் போடும்போது அதனுடன் வெண்கடுகையும் சேர்த்து தூபம் போடணும். மன்னனும் அவர் சொன்னவாறே செய்தான்.

thoopam

ஒரு மண்டலத்தில் அவனது பிரச்சனை தீர்ந்தது. வெண்கடுகின் புகையில் தீய சக்திகள் ஓடிவிட்டன. மீண்டும் பழையபடி சிறப்பாக ஆட்சி செய்ய ஆரம்பித்தான். சுதர்சன யோகத்தில் மற்றும் பிற வேள்விகளில் எல்லாம் வெண்கடுகு கொண்டு எரிப்பதைப் பார்த்திருப்போம். இதிலிருந்து வரக்கூடிய புகைக்கு நெகட்டிவ் வைப்ரேஷனையும், தீய சக்திகளையும் அழிக்கக்கூடிய பவர் உள்ளது.

இனி உங்கள் வீட்டிலும் இது போல பிரச்சனைகள் இருந்தால் உங்களைச் சுற்றிலும் தீயசக்திகள் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதனால் வீட்டில் தீப தூப ஆராதனைகளின் போது கண்டிப்பாக சாம்பிராணிக்குப் பதிலாக வெண்கடுகைப் போட்டு புகை போடவும்.

இதிலிருந்து வரும் புகை உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் உள்ள தீயசக்திகளை அழித்துவிடும். உங்கள் முன்னேற்றத்திற்கு எத்தகைய இடையூறும் வராது. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அந்த வகையில், நீங்கள் கண்ணடி படவும் மாட்டீர்கள். உங்கள் குடும்பத்திலும் ஒற்றுமையை உருவாக்குங்கள்.

இதற்கு நீங்கள் தினமும் ஒருவேளையாவது தீபம் தூபம் போட வேண்டும். இதன் மூலம் சர்வ சத்ருகளும் அழிவார்கள். தீய சக்திகளும், தீய ஆவிகளும், தீய ஏவல்களுமே அழிந்து விடுவர். அந்தக்காலத்தில் போரில் காயமுற்றவர்களுக்கு வெண்கடுகை காட்டி அந்தப்புகையை உண்டாக்குவர். அப்போது எமன் அவர் பக்கத்தில் வரமாட்டான். சுதர்சன் வந்து காப்பாற்றி விடுவார் என்பது ஐதீகம்.

 

Published by
Sankar

Recent Posts