பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள். மேலும் ஒரு குடும்பத்தை உயரத்தில் கொண்டு செல்வதற்கு ஒரு பெண் தான் காரணமாக இருப்பாள். 

சமைப்பது, வீட்டு வேலை செய்வது எல்லாம் பெண்களின் கடமை என்று நாம் அனைவரும் தவறாக நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கே காரணம் பெண் தான்.  

தெய்வத்தை பல வகை காரணங்களுக்காக நாம் வழிபாடு செய்கிறோம். அதில் ஆண், பெண் என இருபாலரும் வழிபாடு செய்வோம். ஆண் தெய்வத்தை விட பெண் தெய்வத்தை தான் நாம் அனைவரும் கும்பிடுவோம். 

நம் முன்னோர் காலத்தில் பெண் என்பவள் சமைப்பதற்கும், குடும்பத்தை பராமரிப்பதற்கும் தவிர வேறு எவற்றிற்கும் இல்லை என்று கருதி அடிமையாக நடத்தப் பட்டனர். 

அப்படி இருக்க பெண் தெய்வம் எப்படி உருவானது. நம்மிடம் பெண் தெய்வத்தை வழிபடும் பழக்கம் எப்படி வந்தது. முற்காலத்தில் வீரமும், தன்னம்பிக்கை நிறைந்து போர்களில் போரிட்டு வீர மரணம் அடைந்த பெண்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தான் அந்த பெண்களையே தெய்வமாக வணங்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. 

அதெல்லாம் சரி அதற்காக ஏன் பெண் தெய்வத்தை வணங்க வேண்டும். இந்த நவீன காலங்களில் பெண்கள் ஆண்களைப் போல அனைத்திலும் கலந்து கொண்டு சாதனை புரிகின்றனர். 

இந்த வெற்றிக்கு பெண் தெய்வமும் ஒரு காரணம் எனலாம். ஏனெனில் அவர்களிடமிருந்து தான் பெண்களுக்கு வீரமும், தன்னம்பிக்கையும் வந்தது.
 

Published by
Staff

Recent Posts