ஈஸ்டர் தினம் பிறந்தது இப்படித்தாங்க… பெண்களை போற்றிய இயேசுபிரான்

இன்று (31.3.2024) இயேசு உயிர்த்தெழுந்த நாள். ஈஸ்டர் என்பார்கள். இது உருவான வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போமா…

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட 3ம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததைக் குறித்து கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஞாயிறு தான் உயிர்ப்பு ஞாயிறு. இயேசுவின் உயிர்த்தெழுதல் நாள் தான் ஈஸ்டர்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் கல்லறையில் நறுமணம் பூச விடியற்காலையில் சில பெண்கள் வந்தனர். அப்போது கல்லறை திறக்கப்பட்டு இருந்தது. கல்லறையை மூடி இருந்த கல் புரட்டப்பட்டு இருந்தது.

Easter sunday

அப்போது ஆண்டவரின் தூதர் விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்து கல்லை புரட்டி அதன் மேல் அமர்ந்தார். அப்போது அவரது தோற்றம் மின்னலைப் போன்றும், அவரது ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்ததாக அவரைக் கண்டவர்கள் கலக்கம் அடைந்தார்களாம்.

அப்போது அந்தப் பெண்களைப் பார்த்து அஞ்சாதீர்கள். இயேசுவைத் தேடுகிறீர்களா? அவர் உயிர்த்தெழுந்து விட்டார். அவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்பதை சீடர்களுக்கு போய் சொல்லுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயா போய்க் கொண்டு இருக்கிறார். அங்கு சென்று பாருங்கள் என்றார். முதலில் பயந்தாலும், பெருமகிழ்ச்சியுடன் சீடர்களிடம் சொல்ல ஓடினார்கள்.

அவர்களைக் கண்ட இயேசு அஞ்சாதீர்கள். என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்குப் போகும்படி செய்யுங்கள். அங்கு அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். ஆனால் சில சீடர்கள் தலைமைக்குருவிடம் சொல்ல அவர் இயேசுவின் உடலை சீடர்கள் திருடிக்கொண்டதாகப் போய்ச் சொல்லுங்கள் என்றார்.

இன்று வரை இதுதான் யூதர்களிடம் வதந்தியாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு முதன் முதலில் பெண்களுக்கே காட்சி தருகிறார். 40 நாள்கள் தம் சீடர்கள் மத்தியில் தோன்றினார் இயேசு.

இதையும் படிங்க… புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்

அதன் பின்னே அவர் விண்ணேற்றம் அடைந்தார். இயேசு இறந்ததும் அவரது உடலை அடக்கம் செய்ய அஞ்சி ஆண் சீடர்கள் ஓடினர். பெண்களே முன்வந்து அடக்கம் செய்தனர். பெண்களுக்கே தான் உயிர்த்தெழுந்ததைப் பறைசாற்றும் பணியை இயேசு வழங்கி கௌரவித்தார். பெண்மையைப் போற்றிய நாயகனாக இயேசு இருந்து நமக்கும் வழிகாட்டி வருகிறார்.

Published by
Sankar

Recent Posts