விளையாட்டு

குடியரசு தினத்தில் கெத்து காட்டும் ஒலிம்பிக் நாயகன்; நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஏராளமான நாடுகள் வந்து குவிந்தன. ஆனால் இந்தியாவிற்கு இது ஓரளவிற்கு வெற்றி உள்ள ஒலிம்பிக் போட்டியாக அமைந்தது.

ஏனென்றால் இந்தியா ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு சில வெள்ளி பதக்கங்களோடு ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்தன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா.

இதனால் அவருக்கு அடுத்தடுத்து பாராட்டு வந்த விதமாக இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு பரிசுகளும் ஏராளமாக வந்தன. இந்த நிலையில் ஹரியானா மாநில அரசு அவரை கவுரவிக்கும் விதமாக குடியரசு தின அலங்கார ஊர்தி வாகனத்தில் அவரது உருவம் கொண்ட சிலையை வடிவமைத்து உள்ளதாக கூறியுள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தை ஒட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Vetri P

Recent Posts