ஒரே படத்தில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட முன்னணி ஹீரோ – ஹீரோயின்கள்!

இன்றைய தமிழ் சினிமாவில் விஜய், அஜித்,ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி என பல ஹீரோக்கள் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். இந்த முன்னணி நடிகர்களின் முதல் திரைப்படத்தையும் அவர்களின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் பெற்ற திரைப்படத்தையும் யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் சில ஹீரோக்களின் வெற்றி படங்கள் அவர்களின் திரை வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையின் புரட்டிப் போட்டுள்ளது.

படங்களில் இணைந்து நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து சூப்பர் ஜோடியாக வலம் வருகின்றனர். அந்த வகையில் ஒரே திரைப்படத்தில் ஒன்றாக நடித்து காதல் திருமணம் செய்து கொண்ட முன்னணி பிரபல ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் லிஸ்ட்யை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் நாம் பார்க்கும் திரைப்படம் தேவராட்டம். இந்த படத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் மற்றும் ஹீரோயினாக மஞ்சுமா மோகன் இணைந்து நடித்திருப்பார்கள். ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்த இவர்களுக்குள் காதல் மலர இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இரண்டாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் மரகத நாணயம். இந்த படத்தில் ஹீரோவாக ஆதி மற்றும் ஹீரோயின் ஆக நிக்கி கல்ராணி இணைந்து நடித்திருப்பார்கள். மரகத நாணயம் படப்பிடித்திருக்க பின் நண்பர்களாக பழகி வந்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சூப்பர் ஸ்டாருடன் இணையும் சிவகார்த்திகேயன்! தலைவர் 171 படத்தின் வேற லெவல் அப்டேட்!

மூன்றாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் கஜினிகாந்த்.இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யாவும் ஹீரோயினாக சாயிஷாவும் இணைந்து நடித்திருப்பார்கள் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தொடர்ந்து இருவருக்கும் காதல் மலர்ந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்கிடையே சிறப்பான முறையில் திருமணம் நடந்தது.

நான்காவதாக நாம் பார்க்கும் மஜினி. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யாவும் ஹீரோயினாக நடிகை சமந்தாவும் இணைந்து நடித்திருப்பார்கள். திரைப்படத்தை தொடர்ந்து இந்த முன்னணி ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே காதல் மலர்ந்து மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஆனால் தற்பொழுது சமந்தா மற்றும் நாக சைதன்யா புரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.