Categories: சமையல்

ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை சப்பாத்தி!!

வெந்தயக்கீரை உடலினைக் குளிர்ச்சிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, இத்தகைய வெந்தயக்கீரையில் இப்போது சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கோதுமை மாவு – 1 கப்
வெந்தயக் கீரை – ஒரு கட்டு
தயிர் – 30 மில்லி
பூண்டு- 10 பற்கள்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன், 
ஓமம்  – 1 ஸ்பூன் 
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 
 
1.    வெந்தயக் கீரையை கழுவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெந்தயக் கீரையினை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு, கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 
3.    அடுத்து கீரையினை கோதுமை மாவுடன் கலந்து தண்ணீர், ஓமம் மற்றும் தயிர் போட்டு பிசைந்து ஊறவிடவும். 
4.    அடுத்து சப்பாத்தி மாவினை தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.

Published by
Staff

Recent Posts