எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா.. ஹெல்த்தி பிரேக் ஃபாஸ்ட் ஆக ஓட்ஸ் இட்லி சாப்பிடுங்க…

பொதுவாக நாம் காலை உணவுகளை தவிர்க்க கூடாது. நீண்ட இரவு நேர தூக்கத்திற்கு பின் நாம் எடுத்துக் கொள்ளும் காலை உணவு மிகவும் சத்தானதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும் பொழுது அந்த நாள் சிறப்பானதாக நமக்கு அமையும். மேலும் சத்தான உணவுகளை காலையில் எடுத்துக் கொள்ளும் பொழுது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். காலை உணவாக நாம் ஓட்ஸ் இட்லி சாப்பிடும் பொழுது நாம் சுறுசுறுப்பாக மட்டுமில்லாமல் இளமையாக இருக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
2 கப் – ஓட்ஸ் மாவு
1 – கப் – ரவை
1 கப் – தயிர்
காலிபிளவர்- சிறு துண்டு
1 – கேரட் துருவியது
2 – பச்சை மிளகாய் நறுக்கியது
3 டீஸ்பூன் – கொத்தமல்லி இலைகள்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
½ தேக்கரண்டி – பேக்கிங் சோடா
தண்ணீர் – தேவைக்கேற்ப
1 தேக்கரண்டி – எண்ணெய்
1 தேக்கரண்டி – கடுகு
1 தேக்கரண்டி – உளுந்து பருப்பு
½ தேக்கரண்டி – சீரகம்
¼ தேக்கரண்டி – காய பொடி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள அளவு ரவையை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் கெட்டியான தயிரை ஊற்றி ரவையும் ஓட்ஸ்ம் ஒரு சேர கலக்க வேண்டும். ஒரு பத்து நிமிடங்கள் தனியாக ஊற வைக்க வேண்டும்.

ஒரு வானொலியில் எண்ணெயை சூடாக்கி நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவர், கேரட், பச்சை மிளகாய் இவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும் இதை நாம் அந்த ஓட்ஸ் மாவினுள் சேர்த்து விட வேண்டும். அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலக்க வேண்டும்.

அதன் பிறகு அதே வானொலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இந்த கடுகு தாளித்ததை நாம் அந்த ஓட்ஸ் மாவினுள் சேர்க்க வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் சுறா புட்டு சாப்பிட வேண்டுமா அப்போ இந்த சுவையான மீல்மேக்கர் புட்டு ட்ரை பண்ணுங்க…

இப்போது இந்த கலவையை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் இதில் தேவையான மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நமக்கு மாவு தயாராக உள்ளது. இட்லி பாத்திரத்தில் இந்த ஓட்ஸ் கலவையை சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும், இப்போது நமக்கு சுவையான ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews