பொழுதுபோக்கு

என் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் இவர்தான்… ஜி. வி. பிரகாஷ் உருக்கம்…

ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ரெபல்’. கேரளாவில் உள்ள ஒரு கற்பனையான கல்லூரியை மையமாக வைத்து, உள்ளூர் அரசியல் அமைப்பால் கொடுமைப்படுத்தப்படும் ஒரு தமிழ் மாணவனைப் பற்றிய கதை இது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து அந்த மாணவன் செய்தது என்ன என்பது மீதிக்கதை.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் வி.பி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்திய பாஸ்கர், கல்லூரி வினோத் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ‘ரெபல்’ படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜி. வி. பிரகாஷ் கலந்து கொண்டார். இத்திரைப்படத்தைப் பற்றிக் கூறுகையில், இப்படம் தமிழ் பற்றி பேசும் கதையாக இருக்கும். இயக்குனர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இத்திரைப்படம் என்னிடம் வந்தது சந்தோஷமாக இருந்தது. மமிதா பைஜூ கொடுக்கப்பட்ட ரோலை நன்றாக செய்திருக்கிறார்.

நீண்ட காலம் கழித்து ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா அவர்களுடன் பணியாற்றுகிறேன். அவர் தான் ‘டார்லிங்’ படத்தின் மூலம் என்னை அறிமுகம் செய்து நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு நான் என்றும் கடமைபட்டுள்ளேன். மேலும் இந்த வருடம் அவருக்கு வெற்றிகரமாக அமையும் என்று தெரிவித்தார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ். ‘ரெபல்’ திரைப்படம் வருகிற மார்ச் 22 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Meena

Recent Posts