என்ன? மொபைல் பார்க்கும் குழந்தைகள் இத்தனை பாதிப்பிற்கு உள்ளாகிறார்களா?

“என்னுடைய குழந்தை மொபைல் பார்த்தே வடிவங்கள், நிறங்கள், எண்கள் என அனைத்தையும் கற்றுக் கொண்டான்”. “என் பிள்ளைக்கு மொபைலில் அனைத்துமே தெரியும் எனக்கு தெரியாதது கூட அவளுக்கு இப்பொழுதே தெரிகிறது”. “இவர்களை சமாளிக்கவே முடியவில்லை மொபைல் இருந்தால் தான் ஓரிடத்திலேயே அமர்கிறார்கள் இவர்களை வைத்துக் கொண்டு வீட்டு வேலையை எப்படி பார்ப்பது”. இப்படி பல பெற்றோர்களின் கூற்றை நாம் தினந்தோறும் கேட்டிருப்போம். ஏன் நம் வீடுகளில் கூட குழந்தைகள் மொபைலை வைத்துக்கொண்டு எந்நேரமும் அதில் வரும் பாடல்களில், விளையாட்டுகளில் மூழ்கி இருப்பதை பார்த்திருப்போம்.

kid mobile

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இரண்டு ஆண்டுகள் வீட்டை விட்டு வெளியேவும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த பல குழந்தைகளுக்கு இந்த மொபைல் போன் தான் ஒரே பொழுதுபோக்காக இருந்துள்ளது. இப்படி பல்வேறு காரணங்களுக்காக மொபைலை பார்க்கும் குழந்தைகளுக்கு பலவிதமான பாதிப்புகள் உண்டாகிறது. 

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே மொபைலை பழக்குவதன் மூலம் அவர்கள் பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். மொபைலை உற்று நோக்கினால் கண் பார்வைக்கு கேடு, கண்களில் பிரச்சனை உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் பார்வைத் திறனில் மட்டுமல்ல உடல் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சனைகளையும் இந்த மொபைல் உண்டாக்குகிறது.

kids mobile

மொபைல் பார்க்கும் குழந்தைகளுக்கு மூளையில் கட்டிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இது அச்சுறுத்தும் வகையில் இருக்கலாம் ஆனால் மொபைலில் இருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகளால் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கிறார்கள்.

mobile girl

பல குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன்பு மொபைல் போனை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் இப்படி உறங்கச் செல்லும் குழந்தைகளுக்கு தூக்கம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு தூக்கத்திலும் தான் பார்த்த காட்சிகளையே அவர்கள் திரும்பத் திரும்ப மனக்கண்ணில் காண்கிறார்கள். சமூக வலைதளங்களில் கூட பல குழந்தைகள் தூக்கத்தில்  மொபைலை பயன்படுத்துவது போல கைகளை அசைத்துக் கொண்டே இருக்கும் வீடியோக்கள் பலரையும் அச்சுறுத்தின.

மேலும் மொபைல் என்பது ஒரு வழி கற்றல் ஆகும் பெற்றோரோ ஆசிரியரோ கற்பிக்கும் பொழுது அது குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான உரையாடலை வளர்க்கும். ஆனால் மொபைலில் அதுபோன்று இல்லை. தொடர்ந்து மொபைலை பார்த்து கற்கும் குழந்தைகளுக்கு கற்கும் திறன் குறைவாகவே இருக்கிறது மேலும் பதட்டம், ஏடிஎச்டி, சமூகவளர் திறன் இல்லாமல் இருத்தல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கும் ADHD.. கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் குறைபாடு என்றால் என்ன?

children mob

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மொபைலை கொடுக்கும் பொழுது அவர்கள் பேசும் திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மொபைலால் விஷுவல் ஆட்டிசம் அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் மொபைலை பார்க்கும் குழந்தைகள் சரியான நிலையில் அமராமல் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதால் கடுமையான கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறிய வயதிலேயே ஆளாகிறார்கள்.

boy mobile

மொபைல் குழந்தைகளை விரைவிலேயே தனக்கு அடிமையாக்கி விடுவதால் குழந்தைகளிடம் அவர்கள் கேட்கும் பொழுது நீங்கள் மொபைலை கொடுக்க விட்டால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி பிடிவாதம் பிடிக்க தொடங்கி விடுவார்கள். அப்படி பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை சரி செய்ய வேறு வழி இன்றி பெற்றோர்கள் மீண்டும் மொபைலையே அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் பின்னாலில் ஏற்படும் சிக்கல்களை பற்றி சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

பலர் மொபைலில் பாடல்கள், கார்ட்டூன்கள் போடுவதால் தான் பாதிப்பு தொலைக்காட்சியில் அவற்றை போடுவதால் பாதிப்புகள் இல்லை என்று நினைக்கிறார்கள். தொலைக்காட்சியில் பார்த்தாலும் மொபைலில் பார்த்தாலும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் உண்டு. ஆனால் கண் பார்வையில் ஏற்படும் பாதிப்பும் மொபைல் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பும் குறையலாமே தவிர அதிகமான ஸ்கிரீனிங் நேரம் ஆபத்துதான்…!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews