காசுக்காக இந்த விஷயத்தை எல்லாம் செய்ய மாட்டேன்!.. அதுதான் என் பாலிசி.. ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்!..

‘ஸ்டார் டா’ எனும் செயலியின் துவக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ் குமார் பேசிய விஷயம் தற்போது சமுக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜி.வி. பிரகஷ் இசையமைப்பாளராக மட்டுமல்ல ஒரு நடிகராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் கலக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இது வரை 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக இசையமைப்பாளராக இருந்தாலும் இவர் முதலில் தன் குரலில் ஆடுகளம் படத்தில் பாடியுள்ளார். இவர் தன் மனைவியையும் பல பாடல்களை பாட வைத்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் செம பிஸி:

ஜி.வி. பிரகாஷ் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் படத்தில் இசையமைத்தது மட்டுமல்லாமல் சியான் 62 படத்திலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். எனவே, ஜிவி நிற்கக்கூட நேரமில்லாமல் படு பிஸியாக சினிமாவில் அடுத்தடுத்த படங்களுக்காக உழைத்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் படங்கள் வெளியாக வில்லை ஆனால் அவர் நடிப்பில் 4ஜி, ராமனின் மோகனம், ஜானகி மந்திரம், காதலிக்க யாருமில்லை, கிங்ஸ்டன், இடிமுழக்கம், நாக்கு இங்கோ பேருந்தி, டியர், ரெபல், 13, கள்வன் என ஏகப்பட்ட படங்கள் ரிலிஸாக இருக்கின்றன. எனவே இந்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சினிமாவில் இருக்கும் வாய்ப்புகளை அறிந்துக் கொள்ள உருவாக்கியுள்ள ஸ்டார் டா எனும் செயலியை லான்ச் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த செயலியின் பிராண்ட் அம்பாசிடராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்:

அதன் தொடக்க விழாவில் பேசிய ஜிவி.பிரகாஷ், ”நான் இது வரை 23 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். ஆனால், அதில் 17 படங்கள் புது புது இயக்குநர்களுடன் தான் பணியாற்றியுள்ளேன். பல திறமைசாலிகள் தன் திறமையை வெளிப்படுத்த தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். தக்க சமயத்தில் இந்த ஸ்டார் டா உதவிக்கரமாக இருக்கும் என நம்புகிறேன்.

விளையாட்டு தொடர்பாக பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்தேன். ஆனால், குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள் போன்றவற்றில் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். பெரும்பாலும் சினிமாவுக்கு புதிதாக வரும் போது யாரை பார்ப்பது எங்கே போவது என திகைக்கின்றனர். ஆனால், இந்த செயலி அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த செயலி வாய்ப்பு தரக்கூடிய ஒரு ப்ளாட்ஃபார்மா இருக்கும். இதில் நானும் ஒருபகுதியாய் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...