பேஸ்புக் லைவ் உரையாடலில் நிதி திரட்டும் ஜிவி பிரகாஷ்.. ரசிகர்கள் பாராட்டு!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் இந்திய அரசாங்கம் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவினை மார்ச் 24 ஆம் தேதி முதல் பிறப்பித்துள்ளது.

ஊரடங்கினால் சினிமா, சின்னத் திரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஓய்வில் இருக்கும் நடிகர், நடிகைகள் விதவிதமாக பொழுது போக்குவதோடு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகின்றனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் கடந்த வாரம் யூடியூப்பில் ரசிகர்களுடன் பேசியதோடு, அவர்கள் கேட்ட பாடல்களை பாடவும் செய்தார்.


மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு எடுத்துள்ள ஜிவி பிரகாஷ் அதற்கான ஒரு திட்டத்தினையும் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அதாவது நாளை இரவு 8 மணிக்கு பேஸ்புக்கில் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுடன் உரையாட உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த லைவ் உரையாடலில் கிடைக்கும் வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜிவியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளையும், ஆதரவினையும் தெரிவித்து உள்ளனர்.

Published by
Staff

Recent Posts