குருவாயூரப்பன் ஆண்டி கோலத்தில் நிற்பது ஏன்?


முருகன் ஆண்டிகோலத்தில் கையில் தண்டத்துடனும், கோவணத்துடன் பழனி மலையில் வீற்றிருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணரும் சிகப்பு வண்ணத்தில் கோவணம் அ

ணிந்து காட்சி அளிப்பார் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!

தனக்கு கிடைக்காத மாம்பழத்துக்காக பழனி மலையில் ஆண்டியாய் முருகன் நின்றான். அதேப்போல் குருவாயூரப்பனும் கோவணாண்டியாய் நிற்க ஒரு காரணம் உண்டு. அது என்ன கதையென பார்க்கலாம்!! வாங்க!!


ஒருசமயம் மலையாள தேசத்தில் வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் சன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒருநாள் கண்ணனை தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. சாலை வசதியோ, மின்சார வசதியோ இல்லாத காலக்கட்டம் அது. மூதாட்டிக்கு கண்பார்வை இருண்டு, இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச். சொல்லிக்கொண்டே கால்போன போக்கில் சென்று கொண்டிருந்தாள்.


அப்போது, ஒரு சிறு பையன் அவள்முன் தோன்றி, “ பாட்டி! கவலைப்படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொல்லி, அவளின் கையைப்பிடித்து அழைத்து சென்றான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக்கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என மூதாட்டி கேட்டாள். ன் ‘கோபாலன்’ என பதில் அளித்தான். மூதாட்டி!! “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு எதையாவது நான் தர வேண்டுமே! என்னிடமிருப்பதில் ஏதேனும் கேள் என மூதாட்டி அன்போடு சொன்னாள்.

பதிலுக்கு கோபாலனும் மழையில் என் துணி எல்லாம் நனைந்துவிட்டது. எனக்கு உன்னுடைய புடவையிலிருந்து சிறிது கிழித்து ஒரு கௌபீனம்(கோவணம்) தாருங்கள். அதுபோதும்” என்று கூறினான். அவள், தனது வீட்டை கண்களால் சுற்றி பார்த்தபொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு கௌபீனம் அணிந்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றான்.


அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக சன்னிதியின் கதவைத் திறந்தபோது, கருவறை மூர்த்திக்கு சிவப்பு நிறத்திலான கௌபீனம்(கோவணம்) கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல்நாள் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர். கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது. வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்கிரகம் செய்ததையும் எண்ணி மகிழ்ச்சியடைந்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்பொழுதும் சிவப்பு நிறத்திலான கௌப்பினத்தை நேர்த்திக்கடனாய் செலுத்துவது குருவாயூரில் வழக்கமாய் உள்ளது.

Published by
Staff

Recent Posts