ஆன்மீகம்

நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில் இந்த கோவில் இறைவனை வசிஸ்டர் வழிபட்டதால் வசிஸ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் தாயார் உலகநாயகியம்மை.

இவ்வூரை தென்குடித்திட்டை என  அழைக்கின்றனர். பிரளயத்தின்போது பல இடங்கள் நீரால் சூழப்பட்டபோது இவ்வூரின் திட்டை சிவதலமும், சீர்காழியில் உள்ள சிவதலம் மட்டும் சூழப்படவில்லையாம் அதனால் இதை தென்குடித்திட்டை எனவும் மற்றொரு சிவதலமான சீர்காழியில் உள்ள சிவதலத்தை வடகுடித்திட்டை எனவும் அழைக்கிறார்கள்.

தென்குடித்திட்டையில் தெற்கு நோக்கிய குருபகவான் உள்ளார். இவர் விசேஷமான அம்சங்களுடன் காட்சிதருகிறார். ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இந்த வித்தியாசமான நிலையில் உள்ள குருபகவானை வணங்குவது சிறப்பு என்பதால் குருப்பெயர்ச்சி காலத்திலும் , குருப்பெயர்ச்சி அல்லாத நாட்களிலும் இந்த திட்டையில் பக்தர்கள் தங்களது சுய ஜாதகத்தில் குருவை மேம்படுத்திக்கொள்ள இங்கு வருகை தருகின்றனர்.

நாளை குருப்பெயர்ச்சி விழா நடக்க இருப்பதால் இந்த கோவிலில் கூட்டம் அதிகம் வரும் என்பதாலும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இருந்து திட்டைக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.

Published by
Abiram A

Recent Posts