சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம்!!

சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம் பற்றிப் பார்ப்போம்.

சமயபுரத்து மாரியம்மன் திருச்சியில் உள்ள சமயபுரம் என்னும் ஊரில் வீற்றிருக்கிறாள். மற்ற கோவில்களில் சில சிறப்புமிக்க மாதங்களில் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படும். ஆனால் சமயபுரத்து மாரியம்மனைப் பொறுத்தவரை வருடத்தின் அனைத்து நாட்களிலும் வழிபாடு அமோகமாகவே இருக்கும்.

இத்தகைய சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப் பட்டினி விரதத்தினை மேற்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். அதாவது பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மன் மஞ்சள் நிற ஆடையில் 28 நாட்கள் பட்டினியுடன் விரதம் மேற்கொள்வதுதான் பச்சைப் பட்டினி விரதமாகும்.

அதாவது மாசி மாத இறுதி ஞாயிற்றுக் கிழமை துவங்கி பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருப்பதால், அம்மனுக்கு, உப்பில்லா நீர் மோர், கரும்பு பானகம், இளநீர் மற்றும் பழங்களே படைக்கப்படும்.

இத்தகைய நாட்களில் பக்தர்களும், அம்மனைப் போல் உப்பில்லா நீர் மோர், கரும்பு பானகம், இளநீர் மற்றும் பழங்களே சாப்பிட்டு விரதம் இருப்பர். இத்தகைய விரதத்தினை 28 நாட்கள் மேற்கொள்வோருக்கு அம்மன் கிடைத்த வரங்களை அருள்வார்.

இத்தகைய பச்சை பட்டினி விரதத்தை அதிக அளவிலான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் அம்மனின் அருள் பெற இருந்து வருகின்றனர்.

Published by
Staff

Recent Posts