100 மில்லியனைக் கடந்த காவாலா பாடல் – சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா?!

“ஏய் இங்க நான் கிங், நான் வச்சது தான் சட்டம்..’‘ நடிகரையும் தாண்டி ரஜினி என்ற மனிதரிடம் அப்படி என்ன பவர் இருக்குதோ? மீண்டும் மீண்டும் அவர் ரெக்கார்டை அவரே உடைத்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் உலக அரங்கில் மீண்டும் சூப்பர் ஸ்டாரை நிலைநிறுத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிங் ஆக மாறினார்.

நெல்சனுக்கு பீஸ்ட் படத்திற்கு பின் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு அமைய ஜெயிலரில் அதை சரியாக பயன்படுத்தி இருப்பார். பீஸ்ட் படத்தின் எதிர்மறை விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் ஜெயிலர் எப்படியாவது ஹிட் கொடுக்கவேண்டும் என்று அயராது உழைத்து சூப்பர் ஸ்டாரை மீண்டும் கலெக்ஷன் கிங்-ஆக மாற்றினார் நெல்சன்.

குழந்தைகளையும் விட்டு வைக்காத காவாலா பாடல் 

அனிருத்தின் அதிரடி இசையில் ஜெயிலர் படத்தின் பாடலான காவாலா வெளியாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாட்டுக்கு அடிமையாகினர். ரீல்ஸ்களில் இந்தப் பாடலை ரிபீட் மோடில் கேட்க வைத்து பாட்டை ஹிட் ஆக்கச் செய்தனர். தமன்னாவின் குத்தாட்டம் இந்தப் பாடலுக்கு மேலும் வலு சேர்த்தது. அருண்ராஜா காமராஜ் வரிகளில், ஷில்பா ராவ், அனிருத் பாடிய இப்பாடல் படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. மேலும் சூப்பர் ஸ்டாரின் நடன அசைவுகளை வெகு நாட்களுக்குப் பின் ரசிகர்கள் திரையில் பார்த்து மகிழ்ந்தனர்.

Jailer Kaavala

இந்திய திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் : 58 வயதில் அடியெடுத்து வைக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே அரபிக்குத்து பாடலில் விஜய்யை நடனத்தில் இன்னும் ஒருபடி மேலே கொண்டு சென்ற ஜானி மாஸ்டர் காவாலா பாடலுக்கும் நடனம் அமைத்து தமன்னாவை அடுத்த லெவலில் கொண்டு சென்றார். இப்பாடலின் டான்ஸ் ஸ்டெப்களை ரீகிரியேட் செய்யாத பிரபலங்கள் மிகக் குறைவு.

இவ்வாறு யூடியூப் தளத்தில் வெளியான காவலா முழு வீடியோ பாடல் தற்போது 100 மில்லியனைக் கடந்து அதாவது பத்து கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. இந்த லிஸ்ட்-ல் ரவுடி பேபி, அரபிக்குத்து, எஞ்சாயி என் ஜாமி, வாத்தி கம்மிங், குலேபா, தாய் கெழவி, பேட்ட போன்ற பல பாடல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews