பைக்கில் இனி 3 பேர் வரை போகலாமா?

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சாலைப்போக்குவரத்து பாதுகாப்பில் அண்டை மாநிலமான கேரளா பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக நவீன தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து விதிகளை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 750 செயற்கை கேமராக்கள் சாலை விதிகளை தானாக கையாண்டு ஆராய்ந்து அபராதம் விதித்து வருகிறது.

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வைத்துக்கொண்டு 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மூன்றாவது நபராக ஏற்றுக்கொள்ளும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேரளா அரசு முடிவு செய்தது.

அபராதம் விதிப்பதில் இருந்து விதிவிலக்கு கோரி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் கேரளா அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எழுதியிருந்தார். குடிமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் வரை அபராதங்கள் விதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி இளம்பரம் காரின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்க்கு கடிதம் ஒன்று எழுதினார். அவர் தனது கடிதத்தில் கேரளாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல் அனுமதிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

கார் வாங்கும் வசதி இங்குள்ள பெரும்பாலான மக்களிடம் இல்லை எனவே சாலை பாதுகாப்பு விதிகளை ஒழுங்காக கடைபிடித்து 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மூன்றாவது நபராக அனுமதிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.

ஸ்ட்ராபெரி நிறத்தில் காட்சியளித்த நிலா! என்ன காரணம் தெரியுமா?

இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல் அனுமதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று தெரிவித்தார். மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 இது தடை செய்யப்பட்டது என்று தெரிவித்தவர் உலகம் முழுவதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

Published by
Velmurugan

Recent Posts