தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் மிகப்பெரிய அளவில் ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் சம நிலையில் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கம் விலை ஒரு கிராம் 5500 இல் இருந்து 5600 வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தங்கம் ஒரு கிராம் 40 ரூபாய் திடீரென குறைந்து ரூ.5550 என விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கம் 6010 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 40 ரூபாய்க்கு தங்கம் விலை குறைந்திருப்பது தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இது நிரந்தர வீழ்ச்சி இல்லை என்றும் வெகு விரைவில் தங்கம் மீண்டும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தங்கம் உயர்வதற்கு முன்பாக இன்னும் ஓரளவு இறங்கும் என்று தங்க நகைக்கடைக்கார்ர்கள் கணித்துள்ளனர். தற்போது ஒரு கிராம் ஆபரண தங்கம் 5550 என விற்பனையாகி வரும் நிலையில் 5000 வரை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தங்கம் இறங்க இறங்க பொதுமக்கள் தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தங்கத்தின் விலை தற்போது சரிந்து வருவதால் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது என்றும் ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக தான் மிக வேகமாக சரியில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த சரிவை பயன்படுத்தி முதலீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கம் விலை 2024 ஆம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய அளவில் உயரும் என்று கணிக்கப்பட்டு வருகிறது,. எனவே இந்த கிடைத்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி பொன்னான முதலீட்டான தங்கத்தை வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts