ஒரு மாதத்தில் 100 ரூபாய் மட்டுமே ஏற்ற இறக்கம்.. என்ன நடக்கிறது தங்கம் விலையில்?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 100 ரூபாய் மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் தேவை அதிகமாக இருந்தாலும் தங்கத்தின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதும் தினமும் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்ற அளவில் மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தங்கத்தின் விலை கடந்த மாதம் 18ஆம் தேதி ரூ.5650 என்று இருந்த நிலையில் இன்று 5452 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதாவது ஒரு மாதத்தில் சுமார் 100 ரூபாய் மட்டுமே இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கத்தின் விலை அமெரிக்கா சந்தையில் பெரிய அளவில் உயரவில்லை என்பதும் இந்தியாவில் உயராமல் இருப்பதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்பதாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் அளவு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தருவதால் தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் பிக்சட் டெபாசிட்டிலும் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பங்கு சந்தை தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்து நல்ல லாபத்தை கொடுத்து வரும் நிலையில் பங்குச் சந்தையிலும் பலர் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். எனவே தங்கத்தின் முதலீடு செய்யும் பணத்தின் அளவு குறைந்து விட்டதாலும் தங்கத்தின் விலை ஏறவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் கண்டிப்பாக தங்கத்தின் விலை உயரும் என்றும் அமெரிக்காவில் உயர்ந்தால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் உயரும் என்று கூறப்படுகிறது. தங்கத்தில் எப்போது முதலீடு செய்தாலும் அதிக லாபத்தைத் தான் கொடுக்கும் என்றும் தங்கத்தின் முதலீடு செய்வது லாபகரமானது மற்றும் நம்பகத்தன்மையானது என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையில் பெரிய அளவு ஏற்ற இறக்கம் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக ஒரு கிராம் ரூ.6000 என்ற நிலை வெகு சீக்கிரம் வரும் என்று கூறப்படுகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற விலையும் வரலாம் என முதலீட்டு ஆலோசகர்கள் கணித்து உள்ளனர்.

Published by
Bala S

Recent Posts