2K கிட்ஸ் கொண்டாடும் வெற்றிப் படமாக ரீ- ரிலீஸாகி பட்டைய கிளப்பும் ‘கில்லி’… மக்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போமா?

2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கில்லி’. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

‘கில்லி’ திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்திருந்தனர். ஒளிப்பதிவு கோபிநாத், படத்தொகுப்பு வி. டி. விஜயன் மற்றும் பி.லெனின் ஆகியோர் செய்துள்ளார். படத்திற்கான வசனங்களை பரதன் எழுதியுள்ளார். ‘கில்லி’ திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. மேலும் நடிகர் விஜய் நடித்த படங்களில் ‘கில்லி’ சிறந்த மற்றும் முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த படத்தில் வரும் ‘இந்த ஏரியா, அந்த ஏரியா, எந்த ஏரியாவிலும் ஐயா கில்லி டா’, என்ற வசனமும், பிரகாஷ்ராஜ் கூறும் ‘ஹாய் செல்லம்’ என்ற வசனமும், த்ரிஷா கூறும் ‘எனக்கு காரப்பொறி சாப்பிடணும் போல இருக்கு’ ஆகிய வசனமும் பிரபலமானவை.

இந்நிலையில் தற்போது ஏப்ரல் 20 ஆம் தேதி ‘கில்லி’ திரைப்படம் தியேட்டரில் ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது. மக்கள் மற்றும் 2K கிட்ஸ் ஆகியோர் இந்த படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். 2K கிட் விஜய் ரசிகர் ஒருவர் இந்த படத்தைப் பற்றி கூறியது என்னவென்றால், கில்லி திரைப்படம் ரிலீஸாகும் போது நான் குழந்தையா இருந்தேன். இப்போ இதனை வருஷம் கழிச்சு தியேட்டரில் பார்க்கும் பொழுது அப்படி ஒரு வைப் ஆக இருக்கு, 20 வருஷம் ஆன படம் மாதிரியே இல்ல, புதுசா ரிலீஸ் ஆன மாதிரி தான் இருக்கு என்று கூறியுள்ளார்.

மேலும் மக்கள், 20 வருடம் அல்ல 40 வருடம் ஆனாலும் ‘கில்லி’ திரைப்படம் எவெர்க்ரீன் படம் தான். இந்த படத்தில் வசனங்கள், இசை, தளபதியின் நடிப்பு எல்லாமே வேற லெவலா இருக்கு. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. ரொம்ப நாள் கழிச்சு ஆரவாரத்தோட படம் பார்த்த அனுபவம் கிடைச்சிருக்கு என்று மக்கள் பகிர்ந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...