80 வருடங்களுக்கு முன்பே 1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை… வாயடைத்துப் போன ஹீரோக்கள்!

முருகன் பக்திப் பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருது திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ‘ஞானபழத்தைப் பிழிந்து‘ என்ற பாடல்தான். தன்னுடைய வெண்கலக் கணீர் குரலால் தமிழ் சினிமாவிலும், இசையுலகிலும் ஒரு சகாப்தத்தை உருவாக்கியவர் கே.பி. சுந்தராம்பாள். ஔவையார் என்றாலும் நினைவுக்கு வருவது இவரது முகமே.

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதன் சுருக்கமே பின்னாளில் கே.பி. சுந்தராம்பாளாக மாறியது. சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்ட கே.பி. சுந்தராம்பாள் குடும்ப வறுமை காரணமாக ரயிலில் பிச்சை எடுத்து பாடியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இவரின் திறமையை அறிந்த இசையுலகம் இவரை வாரி அணைத்துக் கொண்டது.  பல்வேறு கச்சேரிகளில் பாடி தனது இசைஞானத்தை வளர்த்து இசையுலகில் தவிர்க்க முடியாத சக்தியானார். அந்தக் காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுத்த நிலையில் அந்த வரலாற்றை உடைத்தார். மேலும் நடிப்பில் கவனத்தைக் குறைத்து இசையில் அதிக ஈடுபாடு காட்டத் துவங்கியதால் நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்டார்.

KB Sundarambal

இந்திய திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் : 58 வயதில் அடியெடுத்து வைக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனால் தன்னை தயாரிப்பாளர்கள் ஒதுக்குவார்கள் என்ற எண்ணத்தில் இருந்த அவருக்கு ஒரு தயாரிப்பாளரோ, ஒருலட்சம் ரூபாய் தந்து, சுந்தராம்பாளை நடிக்க வைத்தார். அந்தப் படம்தான் “பக்த நந்தனார்”. மஹாராஜபுரம் விஸ்வநாதன், சுந்தராம்பாள் என்ற இருபெரும் இசைமேதைகள் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமான பக்த நந்தனார் படுதோல்வியடைந்தது.

இந்தத் திரைப்படத்தில் 41 பாடல்கள் அதில் 19 பாடல்கள் கே.பி.எஸ் பாடியது. எனினும், இந்தியாவிலேயே, ஒருலட்சம் ரூபாய் ஊதியத்தை இப்படத்திற்கு வாங்கிய வகையில், சுந்தராம்பாள் வாங்கிய சம்பளம் அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் அரசியலிலும் நுழைந்து காமராசர் ஆட்சியில் சட்ட மேலவை உறுப்பிராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அரசு இவருக்கு தேசிய விருதையும், பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்தது.

அடுத்து அதிரவைத்தவர் எம்.ஆர்.ராதா. தமிழ்திரையுலகில் அறிமுகமாகி, ஓரிரு படங்களில், சிறுவேடங்களில் மட்டும் நடித்த நிலையில், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் சச்சரவு ஏற்பட்டு நாடகத்துறைக்குச் சென்று, பல நாடகங்களை நடத்தினார். அவற்றில், “ரத்தக்கண்ணீர்” நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதைப் படமாக்க விரும்பிய தயாரிப்பாளர்களிடம், ஒருலட்சத்து ஒரு ரூபாய் சம்பளம் கேட்டு அதிர வைத்தார் எம்.ஆர்.ராதா. தயாரிப்பாளரும் வேறுவழியின்றி கொடுத்து நடிக்க வைத்தார் என்பது வரலாறு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...