கேது தோஷம் நீக்கும் விநாயகர்

236b5e117c3915ba4625dae3d3fb0c83

கேது பகவானுக்கு அதிதேவதை என்று சொல்லப்படுபவர் விநாயகர். இவருக்கு உரிய பரிகாரங்களையும் வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வந்தாலே  ஜாதக ரீதியாக கேது ரீதியாக உள்ள பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.

கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.