விநாயகர் சதுர்த்தி!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோலால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும், இவற்றை மீறினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்தலாம் என்றும் ஒருமுறை பயன்படுத்தும், தெர்மாகோலால் ஆன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்கள் அதாவது நச்சு விளைவிக்க கூடிய வர்ணம் பூச்சுகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews