நாம நல்லா நடிச்சா அவருக்கு பிடிக்காது.. வடிவேலுவின் இன்னொரு முகம்.. காமெடி ஜோடிகளுக்கு நடந்த பரிதாபம்..

சில காமெடி நடிகர்கள் தங்கள் பேசும் வசனத்தின் மூலம் சிரிக்க வைப்பார்கள். இன்னும் சிலர் தங்களின் பாடி லாங்குவேஜ் மூலமாகவோ அல்லது ரியாக்ஷன் மூலமாகவோ சிரிக்க வைப்பார்கள். ஆனால் இவை அனைத்தையும் கலந்து ஒரு நடிகரால் சிரிக்க வைக்க முடியும் என்றால் நிச்சயம் வடிவேலுவை மட்டும் தான் கை காட்ட முடியும்.

கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவரும் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமான வடிவேலு, தனது உடல் அசைவுகளாலும், வசனம் பேசும் இயல்புகளாலும் சிரிக்க வைக்கக் கூடிய திறன் படைத்திருந்தார்.

இதனையே தொடர்ந்து தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் திரும்பத் திரும்ப காண்பித்தாலும் மக்கள் சலிப்படையாத வகையில் அவர்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் மீம்ஸ்களில் வடிவேலுவின் முகம் இல்லாமல் ஒரு வீடியோவையோ, புகைப்படத்தையோ பார்ப்பதே மிக அரிதான ஒன்றாக உள்ளது. மீம்ஸின் தந்தை என்றும் குறிப்பிடப்படும் வடிவேலு, நடுவில் சில காலங்கள் எந்த திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இன்னும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள வடிவேல் தொடர்ந்து நடித்து வருவதால் ரசிகர்களும் மிக உற்சாகமடைந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் காமெடி தம்பதிகளான கணேஷ் மற்றும் ஆர்த்தி ஆகியோர் வடிவேலுவை பற்றி தெரிவித்துள்ள சில கருத்து அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவன், மனைவியான கணேஷ் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருமே காமெடி கதாபாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்துள்ளனர். அவர்கள் வடிவேலுடனும் இணைந்து நடித்துள்ள நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வடிவேலு பற்றி யாருக்கும் தெரியாத பல அதிர்ச்சி தகவல்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் பேசிய ஆர்த்தி, “வடிவேலுவுடன் நடிக்கும் போது நாம் நடித்த காட்சியை அவர் பாராட்டினால் அந்த காட்சி படத்தில் இருக்காது. அது பற்றி அவரிடம் கேட்டால், ‘அது நல்லா இல்லம்மா.. அடுத்த படத்துல சிறப்பா பண்ணிடலாம்’ என சொல்லி விடுவார்” என தெரிவித்தார்.

இதே போல வடிவேலுவுடன் ஒரு படத்தில் நடிக்க இருந்த போது நடந்த சம்பவம் பற்றி பேசிய கணேஷ், “ஒரு படத்தில் நடிப்பதற்காக கேரவனில் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் வடிவேலு சொன்னதன் பெயரில், நான் நடிக்க வேண்டாம் என இயக்குனர் என்னிடம் கூறினார். இது பற்றி வடிவேலுவிடம் கேட்டால், ‘உனக்கு வேற ஒன்னு வெச்சுருக்கேன். நம்ம நல்லா பண்ணிடலாம்’ என கூறி என்னை அனுப்பி விட்டார்” என தெரிவித்தார்.

இதே போல, தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான் வடிவேலு வாய்ப்பு கொடுப்பார் என்றும் அதுவும் அவர் சொல்வது போல நடந்து கொண்டால் தான் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்றும் கணேஷ் மற்றும் ஆர்த்தி தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...