வெள்ளிக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

வெள்ளிக்கிழமை சுக்ரன் அதிகம் நிறைந்தது. சுக்ரன் அதிபதியான ராசிகள் துலாம் மற்றும் ரிஷபம் ஆகும். வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். இவர்களிடம் மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இருக்கும். பொதுவாக அமைதி, அன்பு, அழகு, வாசனை, சுகம், வசதி போன்றவற்றை விரும்புவார்கள். இசை, ஓவியம், நடிப்பு, கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதற்காக இவர்கள் நேரம் அதிகமாக செலவு செய்வார்கள். அதனைக் கற்று தேர்ச்சி பெறுவார்கள்.

இவர்களுக்கு கலைப் பொருட்கள் மீது விருப்பம் இருக்கும் மற்றும் அதனை வீட்டில் வாங்கி அலங்கரிப்பார்கள். வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவர்கள் இருக்கும் இடம் கலை நிறைந்து காணப்படும். இவர்கள் எப்பொழுதுமே சந்தோசமாக இருப்பார்கள். புன்னகை முகத்தில் இருக்கும் ஆனாலும் சிறு விஷயத்திற்கு கோபப்படுவார்கள். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அதனை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பார்கள். அதை விட்டு வெளிவருவதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

வாசனைப் பொருட்கள், அழகுப் பொருட்களுக்கு அதிகமாக செலவு செய்வார்கள். ஆடை மற்றும் ஆபரணம் மீது ஆசை இருக்கும். பெரும் செலவு அதற்கு தான் செய்வார்கள். இவர்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதில் நாட்டம் இருக்கும். இவர்கள் சில நேரங்களில் பணத்தை நல்ல விதமாக செலவு செய்ய கூடியவராக இருப்பார்கள்.

வெள்ளிக்கிழமையில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். இவர்களுக்கு ஆடை, ஆபரணம், பொருட்கள், வசதி போன்றவை அமையும். இவர்களிடம் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். வியாபாரம் செய்வதில் நாட்டம் இருக்கும். இவர்கள் நல்ல உடை உடுத்துவது, பழகுவது, பக்குவமாக நடந்து கொள்வது என்று இருப்பார்கள். எங்கே எப்படி இருக்க வேண்டும் மற்றும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவர்கள். சுக்ரன் அழகிற்கு அதிபதி என்பதால் இவர்களிடமும் சுக்ரனின் பண்புகள் அதிகமாக காணப்படும்.

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும். இவர்களிடம் இறை பக்தி அதிமாக இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.