முதல்முறையாக வீட்டில் தேனுவிற்கு கிடைக்கும் அங்கிகாரம்… பொறாமையில் பொங்கும் ஜோதி… சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் தென்னரசு குடித்துவிட்டு தேனுவிடம் நீ கர்ப்பமா இருக்க அதுக்கு அப்பா அம்மா சப்போர்ட் பண்றாங்கன்னு சந்தோசப்படாத, இரண்டு மாசம் தான ஆகியிருக்கு, இன்னும் எட்டு மாசம் இருக்கு அதுக்குள்ள அந்த குழந்தையை நான் கொன்று விடுவேன் என்று கூறுகிறான். மறுபுறம் மீனாள் எனக்கு நண்டு கறி செஞ்சு தாங்க என்று கலாட்டா செய்கிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்திருந்தது.

இன்றைய எபிசோடில் இனி என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். மீனாள்காக கஸ்தூரி நண்டு கறி செய்வதற்கு நண்டு வாங்கி வந்து விடுகிறாள். அதை எப்படி சமைப்பது என்று தெரியாமல் அவளது அத்தையிடம் கேட்கிறாள். அதற்கு பாட்டி நீயாச்சு உன் மருமகளாச்சு நான் போறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

மறுபுறம் சக்தி தேனுவிடம் எல்லாருக்காக காத்திருக்காதீங்க அக்கா நீங்க மாசமா இருக்கீங்க முதலில் நீங்க சாப்பிடுங்க என்று கூறுகிறாள். உடனே ஜோதி வந்து தடுக்கிறாள். வீட்டில் ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகு பொம்பளைங்க சாப்பிட்டா தான் தாலி நிலைக்கும். அதனால தேனு நீ பொறுமையா இரு ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம் என்று கூறிவிடுகிறாள்.

பின்னர் சிக்கல் சிவபதி, தென்னரசு, வேலன் ஆகியோர் சாப்பிடுகின்றனர். சிக்கல் சிவபதி தேனுவைப் பார்த்து, வாயும் வயிறுமா இருக்கிற பொண்ணு நீ நேரத்துக்கு சாப்பிட வேணாமா, இங்க வந்து உட்காந்து சாப்பிடு என்று கூறுகிறார். உடனே சக்தி தேனுவை சாப்பிட வைக்கிறார். வீட்டில் தனக்கு முதல்முறையாக அங்கிகாரம் கிடைத்ததை நினைத்து பூரிப்படைகிறாள்.

சிக்கல் சிவபதி சக்தியிடம் தேனுவிற்கு குழந்தை பிறக்கும் வரை கூடவே இருந்து நல்ல சத்தான சாப்பாடு குடுத்து பாத்துக்க என்று சொல்கிறார். இதனால் ஜோதி சக்திக்கே எல்லா பெயரும் கிடைக்கிறது என்று பொறாமை கொள்கிறாள். பின்னர் சக்தி சமைத்துக் கொண்டிருக்கிறாள். அங்கு வேலன் சக்திக்கு உதவி செய்வதாக கூறி காய்களை வெட்டிக் கொடுக்கிறான். அங்கு வந்த ஜோதி என் புள்ளைய இப்படி சமையல்கட்டுல வேலை செய்ய வச்சிட்டியே பெத்த வயிறு எரியுதே என்று கத்துகிறாள். வேலனை ஆம்பளையா போய் வேலைய பாரு என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். சக்தியிடம் எங்க வீட்ல இதுவரை ஆம்பளைங்க அடுப்பங்கரைக்கு வந்ததில்லை. அதே மாதிரி இந்த வீட்டுக்கு தகுந்த மாதிரி மாத்திக்க என்று கூறுகிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...