விமானம் ரேஞ்ல ட்ரெய்னா- களை கட்டும் இந்தியாவின் முதல் தனியார் ரயில்

இந்தியாவில் தனியாருக்கு விடப்படாத ஒரு துறையாக ரயில்வே இருந்து வந்தது அதை இன்றளவும் நிறைவேற்றி வருகிறது. இருந்தாலும் போக்குவரத்தில் பேருந்துகள், விமானங்கள் எல்லாம் தனியார்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.


இதுவரை பேருந்து, விமானங்கள் மட்டுமே வழங்கி வந்த தனியார் சேவையை முதன் முதலாக ரயிலும் வழங்குகிறது.


தனியார் ரயில் சேவையை நாட்டிலேயே முதன் முதலாக உபியில் ஆரம்பித்து வைத்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

விமானங்களில் உள்ளது போல் பணிப்பெண்கள், ஏசி சேர் கார் என களை கட்டுகிறது இந்த சேவை.

காலை 6.30 மணிக்கு லக்னோவில் புறப்படும் இந்த ரயில் மதியம் 12.30க்கு டெல்லி செல்லும் விரைவு ரயிலாகும். தேஜஸ் எக்ஸ்பிரஸ் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Published by
Staff

Recent Posts