முதல் நாள் ஷூட்டிங்-ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் இமான்

ரஜினி நடித்து வரும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, சிறுத்தை, விவேகம், விஸ்வாசம், வேதாளம் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிவா இயக்குகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீனாவும், குஷ்புவும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.


இப்படத்துக்கு இசையமைப்பவர் இமான். இவர்தான் சிறுத்தை சிவாவின் விவேகம், விஸ்வாசம் இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் இவரே இப்போது ரஜினி நடிக்கும் படத்துக்கும் தொடர்கிறார்.

முதன் முதலில் ரஜினி படத்துக்கு இசையமைக்கும் இமான் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார்.

அவர் ஒரு பாஸிட்டிவான மனிதர் மிக இயல்பானவர் அமைதியானவர் அவரை முதல் நாளில் ஷூட்டிங்கில் சந்தித்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் இமான்.

Published by
Staff

Recent Posts