ஆதிவாசி பெண்.. முன்னணி நடிகையாக ஜெயலலிதா நடித்த ஒரே ஹிந்தி படத்தின் சுவாரஸ்ய பின்னணி!…

தமிழ் சினிமாவில் ஜெயலலிதா ஒரு நடிகையாக ஆட்சி புரிந்து ஹிட் கொடுத்ததை போல, எந்த நடிகையும் ஒரு ரவுண்டு வந்திருக்க மாட்டார் என கற்பூரம் அடித்தே சொல்லி விடலாம். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து ரசிகர்கள் பட்டாளத்தை தங்களுக்காக உருவாக்கிக் கொண்டார்களோ, அதே போன்றொரு நட்சத்திர அந்தஸ்தை நடிகை ஜெயலலிதாவும் பெற்றிருந்தார்.

இதன் காரணமாக தான் அவர் அரசியலில் நுழைந்த சமயத்திலும் கூட அவருக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவும் இருந்தது. சிவாஜி, எம்ஜிஆர் என அந்த காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள ஜெயலலிதாவின் பாதிக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு முன்னணி நடிகையாக இருந்த ஜெயலலிதா, பின்னர் அரசியலில் நுழைந்து எம்ஜிஆரின் கட்சியில் ஈடுபட்டு வந்தார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் பல்வேறு அவமானங்களையும், கஷ்டங்களையும் சந்தித்து முதலமைச்சர் என்ற அரிய சிம்மாசனத்திலும் ஏறி அமர்ந்திருந்தார். இரும்பு பெண்மணி என பலராலும் பாராட்டப்பட்டு வந்த ஜெயலலிதா அப்படி ஒரு நல்லாட்சியை நடத்தியதுடன் மிகவும் கட்டுக்கோப்பாகவும் தன்னுடைய கட்சியை வைத்திருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் அவரது பழைய திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது அந்த காலத்து சினிமா ரசிகர்கள் பலரும் மிகவும் ரசித்து பார்த்து வருகின்றனர். இப்படி சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ஒரு அசத்தலான ஆட்சி புரிந்திருந்த ஆளுமை ஜெயலலிதா, முன்னணி நடிகையாக நடித்த ஒரே ஒரு ஹிந்தி படத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

தன்னுடைய 13 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னதாக தனது குழந்தை பருவத்திலும் மான் மாவுஜி என்ற ஹிந்தி படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார் ஜெயலலிதா.

ஆனால் பின்னாளில் முன்னணி நடிகையாக ஜெயலலிதா நடித்த ஒரே ஹிந்தி திரைப்படம் இஷாத் ஆகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் தர்மேந்திரா, தனுஜா உள்ளிட்ட பலருடன் இணைந்து ஜெயலலிதாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜூம்கி என்ற ஆதிவாசி பெண் கேரக்டரில் ஜெயலலிதா நடித்திருந்த நிலையில் அதன் பின்னர் தனக்கு வந்த ஹிந்தி திரைப்பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், ஜெயலலிதா முன்னணி நடிகையாக நடித்த ஒரே ஹிந்தி திரைப்படம் இஷாத் படம் மட்டும் தான் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...