எங்கெங்கு பல்லி விழுந்தால் என்ன பலன்கள்ன்னு தெரியுமா?!

பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன. பல சிறப்புக்கள்மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று  கூறுவதும் இதனாலேயே. அதுபோல பல்லி நம் உடல்மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. பண்டைய காலத்தில்  பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள். அதுதான் கௌளி சாஸ்திரம்.   

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம். பல்லி இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி, நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம். வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி. வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம். முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை. முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம். கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம். கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம். தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி. தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி. மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி. மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி. மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை. பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

Published by
Staff

Recent Posts