‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாட்டு கேட்டாலே ஞாபகம் வர்ற முகம்.. பல சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை!

Actress Rathna : எம்ஜிஆர் நடித்த ’எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் கோழை கதாபாத்திரத்தில் நடித்த எம்ஜிஆர் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரத்னா. இவர்கள் இருவரும் ’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்ற பாடலில் இணைந்து நடித்திருந்த நிலையில், இன்று வரையிலும் வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாகும்.

நடிகை ரத்னா பழம்பெரும் நடிகை ஜி வரலட்சுமியின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் சிறு வயதிலேயே திரை உலகில் அறிமுகம் ஆகிவிட்டார். தன்னுடைய 16 வது வயதில் அவர் எம்ஜிஆர் நடித்த ’தொழிலாளி’ என்ற திரைப்படத்தில் விஜயா என்ற கேரக்டரில் அறிமுகம் ஆனார். அதற்கு முன்பே அவர் இரு படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களின் கேரக்டர்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. ஆனால் தொழிலாளி படத்தில் நடித்த விஜயா கேரக்டர் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

ratna1

இதனை அடுத்து அவர் உச்சத்துக்கு சென்றது ’எங்க வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் தான். அந்த படத்தில் அவர் எம்ஜிஆர் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் நடிகை ரத்னா. தொழிலாளி, எங்க வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து அவர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் நடித்த ’நாம் மூவர்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு ஜெய்சங்கர் நடித்த ’சபாஷ் தம்பி’ படத்தில் நடித்த அவர், எம்ஜிஆர் நடித்த ’இதயக்கனி’ என்ற திரைப்படத்தில் கமலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் ’பணம் பத்தும் செய்யும்’ ’தென்னங்கீற்று’ ஆகிய படங்களில் நடிகை ரத்னா நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். நடிகை ரத்னம் ஆறு கன்னட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் இரண்டு படங்களில் ராஜ்குமார் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அதேபோல் அவர் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு படம் என்டி ராமராவ் நடித்த ’ஸ்ரீ கிருஷ்ணா பந்தய வேதம்’ என்ற படமாகும். தமிழில் உருவான வல்லவனுக்கு வல்லவன் என்ற திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தில் இருந்து தான் ரீமேக் செய்யப்பட்டது. அந்த தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக மாலா என்ற கேரக்டரில் நடிகர் ரத்னா நடித்திருந்தார்.

rathna2

ஒரு கட்டத்தில் திரையுலக வாய்ப்பு குறைந்த பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் இருக்க ஆரம்பித்தார். இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

தனது 74 வது வயதில் நடிகை ரத்னா உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...