வெளுத்து வாங்கும் கனமழை – வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமான வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூர், தேனி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை வட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews