நடிகர் மனோபாலா திடீர் மரணம்; சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவராக வலம் வந்த மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் மூலம் உதவி இயக்குநராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த மனோபாலா, 1928ம் ஆண்டு வெளியான “ஆகாய கங்கை” படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

ரஜினிகாந்தின் ஊர்க்காவலன், விஜயகாந்தின் சிறைப்பறவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள மனோபாலா, சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 படங்களை தயாரித்துள்ளார்.

சந்திரமுகி, அந்நியன், அரண்மனை உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மனோபாலா உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த சில நாட்களாகவே கல்லீரல் பிரச்சனை காரணமாக மனோபாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 15 நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவிற்கு ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...