ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதி!.. திட்டமிட்டே விஜய் ரசிகர்கள் இப்படி பண்றாங்களா?

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், அந்த படத்தை முடித்ததும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் தான் ரஜினி நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் அதிரடியாக வெளியேறி விட்டதாக விஜய் ரசிகர்கள் பரப்பி வரும் தகவல் உண்மையில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே எந்த ஒரு போட்டியும் இல்லாத நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து இருவருக்கும் இடையே பெரும் சண்டையே இருப்பதாக கிளரி விட்டு வருகின்றனர்.

வதந்தி பரப்பும் விஷமிகள்

ட்விட்டரில் எலான் மஸ்க் கொடுக்கும் காசு காரணமாக அதிக இம்ப்ரஸன்களை அள்ள வேண்டும் என்கிற போட்டியில் ட்விட்டர் இன்ஃப்ளுயன்ஸர் என்கிற பெயரில் ஒருவர் பதிவிடும் ட்வீட்டை காப்பி பேஸ்ட் செய்து தானும் ஒரு டிராக்கர் என தம்பட்டம் அடித்துக்கொண்டு ஏகப்பட்ட நெட்டிசன்கள் நெகட்டிவிட்டிகளை பரப்பி வருகின்றனர்.

பொய்யான தகவல்களை உண்மை என்பதுபோல பிரபலங்கள் எனும் போர்வையில் சிலர் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட இயக்குனரோ நடிகரோ குற்றச்சாட்டுகளை முன்வைக்காத நிலையில் வதந்திகளை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.

ஜெயிலர் பிளாக்பஸ்டர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டிய நிலையில், லியோ திரைப்படம் அந்த வசூலை முறியடிக்குமா என்கிற சந்தேகம் கிளம்பியுள்ள நிலையில், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் லியோ படத்துக்கு வைத்த காட்சிகளை நெல்சன் சுட்டு எடுத்து விட்டதாக பொய் பிரச்சாரம் பரப்பி வருகின்றனர்.

பல படங்களை இன்ஸ்பயர் செய்து எடுத்த அட்லியின் திரைப்படத்திற்கு வசூல் வேட்டையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையில் விஜயின் லியோ ரிலீசாவதற்கு முன்பே எதற்கு விஜய் ரசிகர்கள் இப்படி பயப்படுகின்றனர் கேள்வியை ரஜினிகாந்த் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 

நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜயின் பீஸ்ட் படத்திலேயே ஸ்நைபர் ஷாட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், லியோ படத்தில் அந்த காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதனை திருடி நெல்சன் இயக்கியதாக உருட்டுவதெல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை என்கின்றனர்.

ஹாலிவுட் படங்கள் தொடங்கி உலக அளவில் ஏகப்பட்ட படங்களில் இதேபோன்ற ஸ்னைப்பர் ஷாட் காட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த ஒரு சீனுக்கு ஏன் இவ்வளவு பெரிய சீன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தற்போது தகவல் தெரிவித்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...