தமிழின் குறைந்தபட்ச வரலாறு இந்த அரசுக்கு தெரியுமா?

இந்திய அரசு எப்போதும் ஒவ்வொரு மாநிலத்தையும் கட்டாயம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறது மற்றும் அது பழமையான சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது எனவும் கூறி அதுவே இந்த நாட்டிற்கு அரசு மொழி என பறைசாற்றுகிது. சமஸ்கிருத மொழி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. யாரும் பேச்சளவில் பயன்படுத்துவதும் இல்லை.

தமிழில் எழுதப்பட்ட மிக பழமையான நூல் கி.மு 500 என வரலாறு கூறுகிறது. அதை சொன்னாலும் யாருக்கும் புரிவதும் இல்லை. தமிழ் மொழியை தமிழர்கள் தான் பேசுகிறார்கள் என மத்திய அரசு (ஹிந்தி அரசு) சொல்லி வந்த போதும், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீ லங்கா, தமிழ் நாடு போன்ற பல்வேறு இடங்களிலும் தமிழ் பேசப்பட்டு வருகிறது. எனக்கு தெரிந்து நமது மொழியின் வார்த்தைகள் பெரும்பாலானவை மற்ற மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லெமுரியா கண்டம் நீரில் மூழ்கியபோது உலகம் முழுவதிலும் இந்த தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்பதே உண்மை. இன்று நமகென்று இருக்கும் பகுதி மிக குறைவு என்பதாலோ என்னவோ நம் மொழியையும் குறைத்து எடைப்போடுகிறார்கள் இவர்கள். அதனால்தான் மாயன் கலாசாரம் தமிழ் கலாச்சாரத்தோடு மிகவும் ஒத்து போகியும் யாரும் அதனை வெளிச்சம் போட்டு காட்டிட முன்வருவதில்லை.

Published by
Staff

Recent Posts