பொழுதுபோக்கு

முதல் டயலாக்கை 100 முறை சொன்ன ரஜினி… பாலசந்தர் வைத்த அந்தப் பெயர் யாருடையதுன்னு தெரியுமா?

அபூர்வராகங்கள் படத்தில் தான் ரஜினிகாந்த் முதன்முதலாக அறிமுகமானார். சிவாஜி ராவ் என்ற இயற்பெயருடன் தமிழ்த்திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார்.

இயக்குனர் பாலசந்தரின் அறிமுகம் என்றால் சும்மாவா… அந்தப்படத்திற்கான சூட்டிங்கிற்குச் செல்ல ரஜினியின் வீட்டு வாசலுக்குக் கார் வந்து நின்றது. கிளம்பி தயாராக இருந்த ரஜினி அன்று முதல் நான் சூட்டிங் என்பதால் படபடப்புடன் இருந்தார்.

அவரை ஏற்றிக்கொண்டு கலாகேந்திரா அலுவலகத்திற்குச் சென்றது அந்தக் கார். அங்கே படபடப்புடன் இருந்த ரஜினியைப் பார்த்த அனந்து ஏன் பயந்த மாதிரி இருக்க? தைரியமா இரு என ஆறுதல் சொன்னார்.

கமலைப் பார்த்ததும் உங்களின் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தைப் பார்த்தேன். ரொம்ப அருமையாக இருந்தது என்றார். கமல் அதை சிரித்தபடி ரசித்தார். சூட்டிங்கில் இருந்த நாகேஷ், ஸ்ரீவித்யா இருவருக்கும் பாலசந்தர் ரஜினியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது சார் நான் சிகரெட்டை அப்படியே தூக்கிப்போட்டு வாயாலேயே கவ்விப்பிடிப்பேன்னு ரஜினி சொன்னார். அதைப் போலவே செய்தும் காட்டி எல்லோரையும் அசத்தினார். இதை பாலசந்தரும் ரசித்தபடி இந்த ஸ்டைலை அடுத்த படத்தில் வைத்துக் கொள்ளலாம் என்றார்.

Rajni, BC

முதல் டயலாக். பைரவியாக வரும் ஸ்ரீவித்யா வீட்டுக் கேட்டைத் திறந்த படி உள்ளே செல்லவேண்டும் ரஜினி. அப்போது மேலே கமல், ஸ்ரீவித்யா பேசிக்கொண்டு இருப்பார்கள். கமல் கார் சாவியை கையால் போட்டு போட்டுப் பிடித்துக் கொண்டே பேசுவார். சாவி கீழே விழுகிறது.

அங்கு தான் ரஜினி நிற்கிறார் பரட்டைத்தலையுடன். கமல், நீ யார் எனக் கேட்கிறார். நான் பைரவியோட புருஷன் என்கிறார் ரஜினி. இந்த டயலாக்கை மட்டும் 100 தடவை சொல்லியிருப்பார் ரஜினி. பாலசந்தர் ஆக்ஷன் சொல்லும்போது எல்லாம் தப்பும் தவறுமாகவே சொல்லி இருக்கிறார் ரஜினி.

இடையிடையே நாகேஷ் வேறு ரஜினியைப் பார்த்துக் கிண்டல் அடித்துக்கொண்டே இருந்தாராம். நீ ஏன்டா கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்க… அவனை நடிக்க விட மாட்டியான்னு பாலசந்தர் நாகேஸைப் பார்த்து கேட்டாராம். இதற்கிடையில் நாகேஷ_ம் ரஜினிக்கு பாலசந்தரிடம் எப்படி நடிக்க வேண்டும் என பல டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார். சிவாஜி ராவ் என்ற பெயரை இந்தப் படத்திற்காக பாலசந்தர் தான் ரஜினிகாந்த் என்று மாற்றியுள்ளார்.

இந்தப் பெயர் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் மேஜரோட மகனாக நடித்தவருக்குப் பாலசந்தர் சூட்டிய பெயர். இந்தப்படத்தோடு மட்டுமல்ல. தொடர்ந்து உன்னைப் பயன்படுத்திக்கப் போறேன்னு ரஜினியின் கைகளைப் பிடித்து ஆறுதலாக சொன்னாராம் பாலசந்தர்.

Published by
Sankar

Recent Posts