பொழுதுபோக்கு

ராஜமாதா.. ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Ramya Krishnan birth day : நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு 53 வயது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பவிட்டாலும் அதுதான் உண்மை. பரத நாட்டிய டான்சராக இருந்தவர், கதாநாயகியாகவும், அம்மனாகவும் மாறி, பின்னர் நீலாம்பரியாக மாறி, கடைசியில் ராஜாமாதாவாக திகழ்கிறார்.

நடிகர்களில் கமல்ஹாசனுக்கு எப்படி எந்த வேடம் என்றாலும் பொருந்துமோ அதுபோல் நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனுக்கு எந்த வேடம் கொடுத்தாலும் பக்காவாக பொருந்தும். நெகட்டிவ் ரோல்களில், கம்பீரமான ரோல்களில், அம்மன் வேடங்களில் ரம்யா கிருஷ்ணனை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது. நடிப்பில் பொளந்துகட்டிவிடுவார். அவருடன் நடிப்பவர்கள் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பது என்பது கடினமான செயலாக மாறிவிடும். கொஞ்சம் அசந்தால், அருகில் உள்ளவர்களின் நடிப்பை இவர் விழுங்கிவிடும் ஆற்றல் உள்ளவர்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கேரக்டர், ரஜினியையே அசரடித்தது. அப்படி நடித்திருப்பார். அந்த படத்தில் நீலம்பாரி வேடம் ரஜினிக்கு நிகராக பாராட்டப்பட்டது. அதேபோல் 90களின் காலக்கட்டத்தில் அம்மன் என்றாலே அது ரம்யா கிருஷ்ணன் தான் என்கிற அளவில் இருந்தது.

சரி விஷயத்திற்கு வருவோம். நடிகை ரம்யாகிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். 1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பிறந்தார். படித்து முடித்துவிட்டு பரத நாட்டியத்தில் பெரும் ஈடுபாட்டுடன் இருந்த ரம்யா கிருஷ்ணன் 1983ம் ஆண்டு வெள்ளை மனசு எனும் படத்தில் நடித்தார் அதன் பின்னர் வெளியான ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்த நடிகருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்தவர், கேப்டன் பிரபாகரன் படத்தில் மிரட்டி இருப்பார்.

40 ஆண்டுகால திரை வாழ்க்கை, 7 ஆண்டுகள் ரகசிய காதல் என ராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் குறித்த பல தகவல்கள்!

அதன்பிறகும் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்தவர் 1995ம் ஆண்டு அம்மன் படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானது. குடும்பம் குடும்பமாக தியேட்டரில் போய் பார்த்தனர். அம்மன் படங்களுக்கான துவக்கப்புள்ளியும் அந்த படம் தான். அதன்பிறகு படையப்பா படத்தில் நடித்தார். அந்த படத்தின் அவர் வில்லியாக வாழ்ந்த நீலாம்பரி கேரக்டர் இன்று வரை பேசப்படுகிறது. இதேபோல் கமல்ஹாசனின் பஞ்ச தந்திரம் படத்தில் நடித்தார். அதிலும் ரம்யா கிருஷ்ணன் வேறலெவலில் நடித்திருப்பார்.

அதன்பிறகு பல படங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணன், பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் ராஜா மாதா கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டருக்கு வேறுயாரையுமே நினைத்துகூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும். இப்போது கிட்டத்தட்ட சினிமாவில் ராஜாமாதா போல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் கடந்த 30 வருடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ரித்விக் வம்சி என ஒரு மகன் உள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்னனும் ஹீரோயின்களுக்கு நிகராக சினிமா படங்களில் நடிக்க சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் சொல்கிறார்கள்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கின்றன. இதுதவிர ஏராளமான நிலம் மற்றும் இடம் வாங்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரம்யா கிருஷ்ணனிடம் 98 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

Published by
Keerthana

Recent Posts