ஜோதிடம்

கெட்ட பழக்கங்கள் விட முடியலேன்னா ஐயப்பன் மாலை அணிய வேண்டாம்

கார்த்திகை மாதம் ஐயப்ப ஸ்வாமிகளுக்கு மாலை அணிவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் அதிக வசதியில்லாதவர்கள் ஐயப்பன் கோவில் சென்றது போக தற்போது மிகவும் கஷ்டப்படுபவர்கள் கூட அய்யப்ப ஸ்வாமிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து கோவில் செல்கின்றனர். இவர்களில் பலர் துன்பத்தை குறைக்க மாலை அணிகிறேன் என்று இருந்து விட்டு மேலும் துன்பத்தை இழுத்துக்கொள்கின்றனர்.

அது எப்படியென்றால் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் தற்போதுள்ள விஞ்ஞான வாழ்க்கையில் எது எதற்கோ அடிமையாகிவிட்டோம் சில போதை ரீதியான விசயங்கள் பலவற்றில் எல்லோருக்கும் நாட்டம் அதிகமாகி விட்டது.

மது அருந்துவது, புகை பிடிப்பது, போதை பாக்கு உபயோகிப்பது, பான்மசாலா உபயோகிப்பது , கஞ்சா அடிப்பது என பலவற்றில் பலருக்கு நாட்டம் உள்ளது.

தீபாவளி என்றால் பொங்கல் என்றால், நண்பரின் திருமணம் என்றால் போதை அடிப்பதுதான் பலரின் வேலையாக உள்ளது. இது போக முன்பு போல் அல்லாமல் பல கடின வேலை பார்க்கும் கூலி தொழிலாளிகள் பலரும் மாலை அணிவதை பார்க்க முடிகிறது. இவர்களில் சரியான முறையில் மாலை அணிந்து ஐயப்ப சாமியை கும்பிடும் பல நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடின வேலை பார்க்கும் கூலி தொழிலாளிகள் சாதாரண நாட்களில் சிகரெட் குடிப்பது, போதை பான்மசாலா உபயோகிப்பது, லேசாக மது அருந்தி வேலை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அப்படி செய்தால்தான் வேலை சீக்கிரம் ஓடும் நன்றாக எனர்ஜியாக வேலை பார்க்க முடிகிறது என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் குறிப்பிட்ட நாட்களிலாவது அந்த நம்பிக்கையை அவர்கள் கைவிட வேண்டும் ஆனால் அப்படி அவர்கள் செய்வதில்லை. மாலை அணிந்தாலும் ஒரு சிலர் இந்த பழக்கங்களை கைவிடுவதில்லை இதனால் அவர்கள் அய்யப்பன் கோவில் சென்று வந்தாலும் அவர்கள் பிரச்சினைகள் விலகுவதில்லை.

முழு மனதோடு அய்யப்பனை நினைத்து துதித்து கெட்ட பழக்கங்களை குறைந்த பட்சம் மாலை போடும் நாட்களிலாவது கைவிட்டு ஒழுக்கத்துடன் கோவில் சென்று வந்தால் மட்டுமே அய்யப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

மாலை அணிந்து தொடர் தவறுகளை செய்தால் துன்பங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். இதில் இருந்து மீள இன்னொரு வழி இருக்கிறது. கெட்ட பழக்கங்களை கைவிட முடியாமல் இருப்பவர்கள் மாலை அணியாமல் இருப்பதே சிறந்தது.

புனிதமான அய்யப்பன் சாமி விரதத்தை களங்கப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.

Published by
Abiram A

Recent Posts