விஜய் படத்தில் ஐபிஎஸ் ஆக கவர்ந்தவர்.. 49 வயதிலேயே உயிரிழந்த சோகம்.. டிஸ்கோ சாந்தியின் கணவர் பத்தி தெரியாத தகவல்..

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள டிஸ்கோ சாந்தியின் நடனம் மற்றும் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது. அதிலும் ராத்திரி நேரத்து பூஜையில், குத்தாலக்கடி கும்மா என டிஸ்கோ சாந்தி தோன்றி இருந்த பல பாடல்கள் இன்றளவிலும் பிரபலம்.

அவரை பற்றி பலருக்கும் நிறைய செய்திகள் மற்றும் தகவல்கள் தெரியும் என்ற நிலையில், அவரது கணவரும் ஒரு நடிகர் என்பது பலரும் அறியாத தகவலே. டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி என்பவர் ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ரீஹரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1987 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் தெலுங்கு படமான பிரம்ம நாயுடு வெளியானது. இதனை அடுத்து அவர் ரஜினிகாந்த் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். ஆனால் அவரது காட்சி பெரிய அளவில் ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதனால் அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்

இருப்பினும் அவ்வப்போது ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். விஜயகாந்த் நடித்த ‘பரதன்’  ‘அலெக்சாண்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்தார். 5தொடர்ந்து அவர் அமிதாப்பச்சன் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படமான ‘உல்லாசம்’ படத்தில் நடித்தார். அஜித், விக்ரம் இணைந்து நடித்த ஒரே படமான இந்த படத்தில் ஸ்ரீஹரிக்கு ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தது.

srihari1

இதையடுத்து சிவாஜி கணேசன் நடித்த ‘மன்னவரு சின்னவரு’ என்ற படத்தில் சிவராஜ் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் அவரை ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் புகழை பெற்று தந்தது. இதன் பின்னர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்திய நடிகர் ஸ்ரீஹரி, நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் நடித்த வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரது அதிரடியான நடிப்பு விஜய் ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில படங்களில் மட்டுமே அவர் நடித்தார். கடைசியாக அவர்  ‘பள்ளிக்கூடம் போகலாமா’ என்ற படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை

இந்த நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தியை காதலித்த நடிகர் ஸ்ரீஹரி கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில் மகள் அக்ஷரா நான்கு மாதத்தில் உயிரிழந்தார். மகள் மறைவினால் அவர்களது குடும்பம் மிகப்பெரிய சோகத்தில் இருந்த நிலையில் மகளின் பெயரால் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதன் மூலம் பல சமூகப் பணிகளை செய்து வந்தார்.

srihari

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சில நகரங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்த ஸ்ரீஹரி தனது வருமானத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை அவர் சமூக சேவைக்காக செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹிந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தனது 49 வது வயதில் அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பிறகு டிஸ்கோ சாந்தி குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.