நம்ம முதலாளி.. நல்ல முதலாளி.. இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு உண்மைச் சம்பவமா? எஸ்.பி. முத்துராமன் சொன்ன சீக்ரெட்

இந்திய சினிமா உலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து சினிமாவின் பல்கலைக்கழகமாக விளங்கிய நிறுவனம் தான் ஏ.வி.எம். ஸ்டுடியோ. 1947-ல் நாம் இருவர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஏ.வி.எம் நுழைந்தது. அதற்கு முன்பு பல படங்கள்  தயாரித்திருந்தாலும் ஏ.வி.எம் என்ற பேனரில் உருவான முதல் படம் இதுவே ஆகும். இதன்பின் ஏ.வி.எம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து இந்திய சினிமாவின் பல்கலைக்கழகமாகவே விளங்கியது.

பல நடிகர், நடிகைகள்,  இயக்குநர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் ஏ.வி.எம் என்ற ஆலமரத்தின் கீழ் உருவானவர்களே. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர்களாக விளங்கியவர்களின் முக்கியமான ஒருவர் எஸ்.பி. முத்துராமன். ரஜினி, கமலுக்கு பல கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து அவர்களை சூப்பர் ஸ்டார்களாக உயர்த்திய இயக்குநர்.

அந்த வகையில் ஏ.வி.எம், ரஜினி, எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் உருவான படம்தான் நல்லவனுக்கு நல்லவன். ரஜினியுடன் கார்த்திக், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதலாளி தொழிலாளி உறவைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியானது ஏ.வி.எம் நிறுனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், மெய்யப்ப செட்டியாருக்கும் உண்மையாகவே நடந்தது. இதுபற்றி இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கூறுகையில்,

“அப்போது தொழிலாளர் ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தது. மெய்யப்ப செட்டியார் அவர்களைப் பார்க்க தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு செட்டியார் வீட் டுக்கே போனோம். செட்டியாரிடம் விஷ யத்தைச் சொன்னோம். செட்டியார் வாசலுக்கு வந்து தொழிலாளர்களைப் பார்த்தார். தொழிலாளர்களும் செட்டியாரைப் பார்த்தார்கள். அந்த இடத்தில் ஒரே அமைதி நிலவியது. சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஸ்டுடியோ முன்பு மூன்று மாதங்களாக ஸ்டிரைக் நடத்திய தொழிலாளர்கள், எங்கள் வேண்டுகோளின்படி ஏவி.எம். செட்டியாரைப் பார்க்க அவர் வீட்டு வாச­லில் வந்து நின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசனை கே.பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தியத பிரபலம்.. ஆண்டவர் சினிமாவுக்கு கிடைத்த அருமையான சம்பவம்

அப்போது அங்கே கூடியிருந்த தொழிலாளர்கள் செட்டியார் காலில் விழுந்து, ‘‘எங்களை மன்னிச்சுடுங்க அப்பச்சி. முதல்ல ஸ்டுடியோவைத் திறங்க. நாங்க ஒழுங்கா வேலை பார்க்குறோம்!’’ என்றார்கள். அப்போது ஏவி.எம் செட்டியார் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மெய்யப்ப செட்டியார் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, ‘‘எழுந்திருக்கப்பா, இனிமேல் யார் சொல்றதையும் கேட்காதீங்க. நம்ம ரெண்டு பேருக்கும் சம்பந்தப்பட்ட ஒரு குழுவை அமைப் போம். உங்களுக்கு என்ன பிரச்சினைன்னாலும் அந்தக் குழுவிடம் சொல்லுங்க. எந்தப் பிரச்சினைன்னாலும் உடனடியாத் தீர்வு காண்போம்!’’ என்றார்.

அவர் சொன்னது போலவே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். ஒரு நாள் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘‘தொழிலாளர்களுக்கு என்ன தேவையோ அதை நிறுவனம் நிறைவேற்றிக் கொடுக்கும். நாமும் அதை சரியாக உணர்ந்து உழைக்க வேண்டும்’’ என்று சொன்னேன்.

கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிய மூச்சு.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உயிர் போகும் தருவாயில் உடனிருந்தவர் இவரா..!

அதை எல்லோரும் புரிந்து கொண்டு வேலை பார்த்தனர். ஸ்டிரைக் நடந்தது என்பதற்கு எந்தச் சுவடும் தெரியாத அளவுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஏவி.எம். ஸ்டுடியோ இயல்பு நிலைக்கு மாறியது. இந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தான் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் தொழிலாளர்கள் வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டே ஸ்டிரைக் நடத்தும் காட்சியை வைத்தோம். அந்தக் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.“ என்று கூறினார். மேலும் படத்தின் வெற்றிக்கும் இந்தக் காட்சியும், எங்க முதலாளி.. நல்ல முதலாளி என்ற பாடலும் உறுதுணையாக இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews