பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் எழுதிய பாட்டில் இத்தனை அர்த்தமா? நடுத்தர வர்க்கத்தின் குரலாக ஒலித்த பேட்டராப் பாடல்

பட்ஜெட் பட இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளராக இருந்து பிரம்மாண்ட இயக்குநராக உருவெடுத்தவர்தான் இயக்குநர் ஷங்கர். திரைத்துறைக்கு வந்த புதிதில் திரைக்கதை எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இயக்குநராக ஆசைப்பட்டு தனது முதல் கதையை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் சொல்ல உருவானதுதான் ஜென்டில்மேன் படம்.

தனது முதல்படத்திலேயே ஆக்சன், காமெடி, காதல், சென்டிமெண்ட், ஆழமான கருத்து போன்றவற்றைக் கூறி விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றியைக் கொடுத்தவர். இயக்குநர் ஷங்கரின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தவர்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், எழுத்தாளர் சுஜாதாவும். இவர்கள் இருவரும் ஷங்கரின் கதைக்கு அழுத்தமான வசனங்களையும், ஹிட் பாடல்களையும் கொடுத்து ஷங்கரை பிரம்மாண்ட இயக்குநர் பட்டியலில் இணைத்தனர்.

தனது படங்களில் காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி ரசிகர்களை மகிழ்வித்த ஷங்கர்  உச்சமாக ஜீன்ஸ் திரைப்படத்தில் உலகின் 7 அதிசயங்களிலும் படப்பிடிப்பு நடத்தி ரசிகர்களை வியப்பின் உச்சியில் ஆழ்த்தினார்.

இப்படி படத்திற்குப் படம் பிரம்மாண்டம் காட்டிய இயக்குநர் ஷங்கர் ஒரு பாடலாசிரியராக மிடில் கிளாஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒரே பாடலில் உணர்த்தியிருக்கிறார். இத்தனை காலமாக நாம் கேட்டு ரசித்து வந்த ஒரு பாடல் தான் காதலன் படத்தில் இடம்பெற்ற பேட்டராப் பாடல். பிரபுதேவா, வடிவேலுவின் காம்பினேஷனில் வந்த சூப்பர்ஹிட் பாடல். இன்றும் இந்தப் பாடலைக் கேட்டால் ஆடாத கால்களும் தன்னாலயே ஆட ஆரம்பிக்கும்.

சின்ன மச்சான் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? Secret உடைத்த செந்தில்-ராஜலட்சுமி

வெறும் துள்ளலிசைப் பாடலாக மட்டுமே இந்தப் பாடலைக் கேட்டவர்களுக்கு பாடலின் வரிகளைக் கேட்டால் அதில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா எனப் புரியும். இந்தப் பாடலில் இடையும் வரும் வரிகளான..

“வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு…
புள்ளகுட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன…
ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும…
பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே…“

என்று வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்க சென்னைவாசிகளின் நிலையை 30 வருடங்களுக்கு முன்னரே கூறியிருப்பார்.  அடுத்த வரிகளில் மாதச் சம்பளதாரர்களின் புலம்பலை அப்படியே உணர்த்தியிருப்பார். அதில்

ஒரென்னா ரெண்டன்னா உண்டியெல்லாம் ஒடச்சி…
நாலென்னா எட்டன்னா கடன உடன வாங்கி…

அண்டா குண்டா அடகு வச்சி…
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்…
பத்தல பத்தல பத்தல பத்தல…

என்று மாதசம்பளத்தின் நிலையை அன்றே உணர்த்தியிருப்பார். இப்படி பல அர்த்தங்கள் நிறைந்த இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தனது பீஸ்ட் மோடில் வெளுத்து வாங்கியிருப்பார். ஷாகுல் ஹமீது, தேனி குஞ்சரம்மாள், சுரேஷ் பீட்டர்ஸ் இந்தப் பாடலைப் பாடியிருப்பர்.

Published by
John

Recent Posts