‘குறுக்கு சிறுத்தவளே’ பாட்டில் ஷங்கர் செய்த புதுமை.. ஆஹா, இத்தனை நாள் இதை நோட் பண்ணதில்லயே..

இன்று ராஜமவுலி, பிரசாந்த் நீல் என பல இந்திய இயக்குனர்களை நாம் பிரம்மாண்ட இயக்குனர் என கூறினாலும் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் SAC-யிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த ஷங்கர், நடிகர் அர்ஜுனை வைத்து ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இளம் இயக்குனரின் முதல் படைப்பே பெரிய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது.

தொடர்ந்து, காதலன், இந்தியன், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0 என பல திரைப்படங்களை ஷங்கர் இயக்கி உள்ள சூழலில், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோரை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். தமிழின் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

பொதுவாக இயக்குனர் ஷங்கர் என்ற பெயரை கேட்டாலே நம் மனதிற்கு உடனே நினைவுக்கு வருவது பிரம்மாண்டம் என்ற வார்தை தான். அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் அல்லது ஏதேனும் காட்சிகளில் மிகப்பெரிய விஷயம் ஒன்று இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு ஜீன்ஸ் படத்தில் வரும் அதிசயம் என்ற பாடலுக்காக, அப்போது உலகின் 7 அதிசயங்கள் இருந்த இடத்திற்கு சென்று படப்பிடிப்பை ஷங்கர் நடத்தி இருந்தார். இதே போல அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல், மலேசியாவில் உள்ள twin towers-ல் படமாக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அங்கே படமாக்கப்பட்ட முதல் திரைப்பட காட்சியும் அது தான் என்பது குறிப்பிடத்தக்கக்து.

இப்படி அனைத்திலும் எதாவது பிரம்மாண்டமாக செய்யும் ஷங்கர், மொத்த படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கி இருந்தார் என்றால் அது எந்திரன் மற்றும் 2.0 ஆகிய படங்கள் தான். தமிழ் சினிமாவில் CG காட்சிகள் அதிகம் வருவதற்கு முன்னோடியாக இருந்த திரைப்படமாக இந்த இரண்டு படங்களும் பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், முதல்வன் படத்தில் வரும் குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலில் புதுமையாக ஷங்கர் செய்த விஷயம் குறித்து பார்க்கலாம். ஐம்பூதங்களாக அறியப்படுபவை நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியவை ஆகும். இந்த ஐம்பூதங்களையும் குறுக்கு சிறுத்தவளே பாடலில், இயற்கைக்கு கைம்மாறு செய்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பார் ஷங்கர். ஒருவேளை நீங்கள் அதை தவற விட்டிருந்தால் நிச்சயம் இனிமேல் பார்க்கும் போது அதை தெரிந்து கொள்ளலாம்.

இப்படி அனைத்திலுமே புதுமையை புகுத்தும் ஷங்கர், கடைசியாக இயக்கிய 2.0 திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலான நிலையில், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.