உன்னோட இசைக்காகவே கதை எழுதுறேன்யா.. இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்..

இன்று இசையுலகில் எத்தனை இசையமைப்பாளர்கள் எத்தனை ஹிட் பாடல்களைக் கொடுத்தாலும் சினிமா உலகில் தனது ஈர்ப்புச் சக்தியால் கடைசியில் மீண்டும் தனது இசை வசமே வரும்படி செய்து மொழி தெரியாதவருக்கும் தனது இசையால் நவரசங்களையும் கொடுப்பவர்தான் இசைஞானி இளையராஜா.

இவரைப் பற்றி நாம் கேட்ட செய்திகள் ஏராளம், ஆனாலும் இவருக்கு முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பலரும் அறியாத் தகவல். இளையராஜா சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் தனது சகோதரர்களுடன் இணைந்து பாவலர் இசைக்குழுவில் கச்சேரி செய்து வந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிக்காக இவர்களது குழு அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து  பல கச்சேரிகளை நடத்தியிருக்கின்றனர்.

அதன்பின் இவர்களது கவனம் சினிமா பக்கம் திரும்ப சென்னை வந்தனர். சான்ஸ்தேடி பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினர். அனைத்து இடங்களிலும் திருப்பி அனுப்பப்பட்டனர். பின் இளையராஜா ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில் அவரது அண்ணன் பாஸ்கர் உனது டியூன்களை தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் போட்டுக்காட்டுவோம் என்று அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து ஒரு சிறிய கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்ய அங்கு இளையராஜா தனது டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.

மறுபடியும் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க ஒருவர் மட்டும் இசைஞானியின் இசையில் ஏதோ உள்ளது எனக் கண்டார். அவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் நண்பர் செல்வராஜ். இந்த செல்வராஜ் இளையராஜாவினைப் பற்றி பஞ்சு அருணாச்சலத்திடம் கூறி அவரைப் பார்ப்பதற்கு நேரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு இவர அடிச்சுக்க ஆளே இல்ல.. விஜயக்குமார் இப்படித்தான் சினிமாவுக்கு வந்தாரா?

எப்படியும் தனக்கு சான்ஸ் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் சென்ற இளையராஜா பஞ்சு அருணாச்சலத்தினைச் சந்தித்து சில டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார். அப்போது இவரது டியூன்களில் மெய்மறந்த பஞ்சு அருணாச்சலம் இதை எப்படி கற்றுக் கொண்டாய் என்று கேட்டார். பின்னர் இளையராஜாவோ ஜி.கே. வெங்கடேஷ் இசையமைப்பாளரிடம் நான் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவருக்கு இயக்குநர்கள் காட்சியைச் சொல்லும் போது அந்தக் காட்சியை நான் மனதில் ஏற்றி என்னுடைய பாணியில் சில டியூன்களைத் தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

உடனே பஞ்சு அருணாச்சலம் இந்த டியூன்களை அப்படியே வைத்திரு. இப்போது நான் காமெடிப் படம் ஒன்றிற்கான பணியில் உள்ளேன். இதை அவற்றில் பயன்படுத்த முடியாது. இந்த டியூன்களுக்காகவே ஒரு கதையை உருவாக்குகிறேன் அப்போது வாருங்கள் என்று அனுப்பியிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் சொல்லியது போலவே மூன்று மாதங்களில் அழைப்பு வர அதன் பின் உருவானது தான் அன்னக்கிளி திரைப்படம்.

பாடல்களுக்காகவே படம் ஹிட்டாகி இசை உலகில் சிம்மாசனம் போட்டு அமர ஆரம்பித்தார் இளையராஜா அதன்பின் இளையராஜா அடைந்த உயரத்தினை இசை ரசிகர்கள் அறிந்ததே.

எந்த இயக்குநர்களிடம் வாய்ப்புக் கேட்டு தனது இசைக் கச்சேரியை நடத்திக் காட்டினாரோ பின் அதே இயக்குநர்கள் இளையராஜாவின் இசைக்காக காத்திருந்தது தனி வரலாறு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews