‘உங்கள் உழைப்பு உங்களுக்கே’ திருடனா இருந்தாலும் மனசாட்சி இருக்கே.. கொஞ்சம் மகிழ்ச்சியில் மணிகண்டன்!

உசிலம்பட்டியில் வாழும் மணிகண்டனின் வீட்டிலிருந்து சில திருடர்கள் நகை, பணம், மற்றும் விலை மதிப்புள்ள சில பொருள்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது அந்த திருடர்கள் அவர் பெற்ற இரண்டு தேசிய விருதுகளை மட்டும் ஒரு கடிதத்துடன் அவர் வீட்டு வாசலில் மாட்டிவிட்டு சென்றது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படம் மூலமாக இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார். அதை தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படமும் தேசிய விருதைப் பெற்றது. அவர் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிறிய காலக் கடத்திலேயே அவரது உழைப்பினால் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மணிகண்டன் வீட்டில் திருட்டு:

இதை தொடர்ந்து மணிகண்டன் 7சி எண்டர்டெய்ன்மண்ட் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில், விஜய் சேதுபதி நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டாரின் ஒடிடியில் வெளியாக உள்ள தொடர் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என இரண்டு படங்களில் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதியின் காம்பினேஷ்னை தொடர்ந்து தற்போது வெப் சீரிஸிலும் இவர்கள் இணையப் போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டததை சேந்த உசிலம்பட்டி என்னும் ஊரில் உள்ள எழில் நகரில் இருக்கும் தனது வீட்டில் இயக்குநர் மணிகண்டன் வசித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவரது அடுத்த படத்திற்க்கான வேலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும், பூட்டிக்கிடந்த உசிலம்பட்டி வீட்டில் சில மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அவர் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், ஐந்து சவரன் நகை மற்றும் அவர் வாங்கிய தேசிய விருதுகள் உள்ளிட்ட சில பொருள்களை திருடியுள்ளனர். இதை தொடர்ந்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவி செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திரும்பி வந்த தேசிய விருது:

இந்நிலையில் இன்று ஒரு பாலித்தின் பையில் மணிகண்டன் வாங்கிய இரண்டு தேசிய விருதுகள் மற்றும் ஒரு கடித்ததை அவர் வீட்டின் வாசலில் வைத்து சென்றுள்ளனர் திருடர்கள். மேலும் அந்த பையில் அவர் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி படத்திற்கு வாங்கிய இரண்டு தேசிய விருதுகளுடன் ஒரு கடிதத்தில் ”அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு” என எழுதியிருந்தது. இதை அறிந்த உசிலம்பட்டி போலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்கள் விருதுகளை மட்டும் திரும்ப வந்து வைத்து சென்றது அந்த பகுதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.