20 படங்களில் 15 படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனர்.. கடனாளியாகி சொந்த வீட்டை விற்ற சோகம்..!

தமிழ் திரை உலகில் 20 படங்கள் இயக்கிய இயக்குனர் ஒருவர் அதில் 15 படங்களை சூப்பர் ஹிட் ஆக்கிய நிலையில், கடைசியில் சொந்த படம் எடுத்து அனைத்து பணத்தையும் இழந்து கடனாளியாகி சொந்த வீட்டையும் விற்ற சோகம் ஏற்பட்டது. அந்த இயக்குனர் கே.ரங்கராஜ் தான்.

தமிழ் திரை உலகில் பலர் கோடி கணக்கில் சம்பாதித்து அதை வைத்து ஒரு சில சொந்த படங்கள் எடுத்து நஷ்டமாகி நடுத்தெருவுக்கு வந்த உதாரணம் நிறைய உள்ளது. அவ்வாறு ஒருவர் தான் இயக்குனர் கே. ரங்கராஜ்.

ஒரே தீபாவளிக்கு வந்த 2 விஜயகாந்த் படங்கள்.. இரண்டுமே தோல்வி..!

கோவில்பட்டி பக்கம் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன். சென்னையில் ஏதாவது வேலை தேடலாம் என்று வந்த இடத்தில் தான் சினிமா பத்திரிகை ஒன்றில் வேலை கிடைத்தது. அவர் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ததை பார்த்தவுடன் பாரதிராஜா அவரை நேரில் அழைத்து அவருடைய எழுத்தை பாராட்டினார். அதன் பிறகு அவரை தனது உதவி இயக்குனர் குழுவில் சேர்த்துக்கொண்டார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான புதிய வார்ப்புகள், காதல் ஓவியம் உள்பட ஒரு சில படங்களில் அவர் உதவி இயக்குனராக இருந்தார். இதனை அடுத்து மோகன், ராதா, பூர்ணிமா பாக்யராஜ் நடித்த ‘நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி பாரதிராஜா அந்த படத்தை பார்த்து அவருக்கு மிகப்பெரிய வாழ்த்து கூறினார்.

இதனை அடுத்து பாண்டியன், ரேவதி நடித்த ‘பொண்ணு பிடிச்சிருக்கு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வசூல் பெற்றது. கே.ரங்கராஜ் இயக்கிய மூன்றாவது படம் தான் சூப்பர் ஹிட். கோவைத்தம்பி தயாரிப்பில் உருவான ‘உன்னை நான் சந்தித்தேன்’ என்ற படத்தை இயக்கினார். சிவக்குமார், மோகன், அம்பிகா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இளையராஜா ஒரு காரணம். அதன் பிறகு தான் கே.ரங்கராஜ் இயக்கிய அனைத்து படங்களிலும் இளையராஜா இசையமைத்தார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், பாடு நிலாவே என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். மொத்தம் 20 படங்களை இயக்கியுள்ளார். அதில் 15 படங்கள் வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் தான் குடும்பப் பாங்கான, காதல் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த கே.ரங்கராஜ் முதல் முறையாக ‘தர்மம் வெல்லும்’ என்ற ஆக்சன் படத்தை தயாரித்து இயக்கினார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்று சொந்த படம் எடுத்தார். ‘சிவரஞ்சனி’ என்ற அவருடைய சொந்த படம் மிக மோசமான தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து ‘எல்லைச்சாமி’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். சரத்குமார், ரூபினி நடித்த இந்த படமும் படுதோல்வி அடைந்த பின்னர் தான் அவர் கடனாளியாகிவிட்டார். சொந்த படங்கள் தயாரித்ததன் காரணமாக கடன் அதிகமாகி விட்டதை அடுத்து கே.கே.நகரில் இருந்த மாளிகை போன்ற சொந்த வீட்டை விற்று விட்டார். அதன் பிறகு அவர் வாடகை வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

இதனை அடுத்துதான் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்த அவர் தொலைக்காட்சி பக்கம் சென்றார். சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், மகாலட்சுமி, பந்தம், ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஆரத்தி ஆகிய சீரியல்களை இயக்கினார். இந்த சீரியல்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இருப்பினும் அவர் கொஞ்சம் கொஞ்சமாகதான் தனது கடனிலிருந்து மீண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts