இயக்குனர் ஹரி- நடிகர் விஷால் கூட்டணியில் உருவான ‘ரத்னம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு…

நடிகர் விஷாலின் தாமிரபரணி (2007) மற்றும் பூஜை (2014) ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி அவர்கள் நடிகர் விஷாலின் 34 வது படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார். அதன்படி மறுபடியும் இயக்குனர் ஹரி- நடிகர் விஷால் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ‘ரத்னம்’.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் முதல் ஷாட் டீசரை நடிகர் விஷால் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும்  இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஷால் நடித்த படங்கள் வணிக ரீதியாக பின்தங்கியது. இறுதியாக கடந்த ஆண்டு அவர் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது மட்டுமல்லாமல் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதற்கு அடுத்தபடியாக நடிகர் விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படம் அதிரடி ஆக்சன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் ‘ரத்னம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘ டோன்ட் ஓரி டோன்ட் ஓரி டா மச்சி’ என்ற பாடலை வி.ஐ.டி பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியில் பன்னிரெண்டாயிரம் மாணவர்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. மாணவர்கள் இப்பாடலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ‘ரத்னம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு அவரது ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews