அவங்க தெளிவாகத்தான் இருக்காங்க..! ரஜினி, விஜய், கமலை வம்புக்கு இழுத்த அமீர்

இயக்குநரும், நடிகருமான அமீர் ரஜினி, விஜய், கமலைப் பற்றி பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இயக்குநர் பாலாவின் உதவியாளராக இருந்து மௌம் பேசியதே படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். கார்த்தியை திரையுலகில் ஹீரோவாக அறிமுப்படுத்தி பருத்தி வீரன் என்ற பிளாக் பஸ்டர் படத்தைக் கொடுத்து கவனிக்க வைத்தார்.

தொடர்ந்து ஜீவா நடித்த ராம், ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் ஆகிய படங்களின் மூலம் முன்னனி இயக்குநரானவர் திடீரென நடிப்பில் பிஸியாகி விட்டார். யோகி திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தவர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ராஜனாக கலக்கினார். தற்போது பாலாவின் வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார் அமீர்.

அரசியல், நாட்டு நடப்பு குறித்து அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வரும் அமீர், ஹிஜாப் சர்ச்சை, சிஏஏ மசோதா போன்றவற்றிற்காக குரல் கொடுத்தார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமா உச்ச நடிகர்களைக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

26வது படத்தை டீலில் விட்ட கார்த்தி?.. 27வது படத்தை ஆரம்பித்து விட்டாராம்.. இயக்குநர் யாரு தெரியுமா?..

அதில், ”ஜெயிலர், விக்ரம், லியோ படத்தில் துப்பாக்கிச் சத்தமும், ஆக்சன் சத்தங்களும், அதிர வைக்கும் இசையிலும் நடித்து இரவில் தூங்கச் செல்லும் முன் இளையராஜா பாட்டைத் தான் கேட்டு தூங்குவார்கள். அவர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். இதே சூழலில் தான் டாடா, விடுதலை, இறுகப்பற்று மாதிரியான படங்களும் வருகின்றன. முன்னணி நட்சத்திரங்கள்தான் இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களுக்குள் வருவதில்லை. அவர்கள் இதுபோன்ற படங்களில் நடிக்கும் போது அனைத்துமே மாறும்“ என அப்பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பட விழாவில் அமீரின் திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட அவரின் துணை தேவைப்படுகிறதா என்ற கேள்விக்கு “பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களுக்கே அவர்கள் படங்களின் வெற்றிக்கு பக்கத்து மாநிலத்தில் உள்ள சூப்பர் ஸ்டார்களின் தயவு தேவைப்படும் போது எனக்குத் தேவைப்படாதா எனவும் பேசி பரபரப்பைக் கிளப்பினார். மேலும் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் டிரைலர் விழாவிற்கு அனைத்து இயக்குநர்களும் வர அவரை அறிமுகப்படுத்திய அமீருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...